- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபி ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. மும்பைக்கு ரகசியமா உதவிய நடுவர்கள்?.. கொந்தளித்த கோலி ரசிகர்கள்..

ஆர்சிபி ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. மும்பைக்கு ரகசியமா உதவிய நடுவர்கள்?.. கொந்தளித்த கோலி ரசிகர்கள்..

- Advertisement 1-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 16 வது ஓவர்களிலேயே இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி போட்டியை முடித்திருந்த நிலையில், ஆர்சிபி அணியினர் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் கோலி 3 ரன்களில் அவுட்டாக வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றி வரும் மேக்ஸ்வெல் இந்த முறையும் டக் அவுட்டாகி இருந்தார். க்ரீனை வெளியே வைத்துவிட்டு வில் ஜாக்ஸை எடுத்ததற்கு பதிலாக மேக்ஸ்வெல்லை வெளியே உட்கார வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். ஆரம்பத்தில் ஆர்சிபி பேட்டிங் பார்த்து ரசிகர்கள் பொங்கி போன நிலையில் பின்னர் பாப் டு பிளஸ்ஸிஸ், ராஜத் படிதர், தினேஷ் கார்த்திக் இணைந்து நல்லதொரு ரன்னை எட்டவும் உதவி இருந்தனர்.

மூவருமே அரைச் சதம் கடந்து பட்டையைக் கிளப்ப அந்த அணி 196 ரன்களை எடுத்திருந்தது. ஆர்சிபி அணி ஜெயிக்க சூப்பர் வாய்ப்பு இருந்த போதும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் வழக்கம் போல ரன்களை வாரி வழங்கினார். அதிலும், இஷான் கிஷன் 23 பந்துகளிலும், சூர்யகுமார் 17 பந்துகளிலும் அரைச்சதத்தை கடக்க, 16 வது ஓவரிலேயே 27 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது.

ஆர்சிபியின் பந்து வீச்சால் பவர் பிளே முடியும் தருவாயிலேயே மும்பையின் வெற்றியும் உறுதியாகி விட்டதால் அப்போது முதலே ஆர்சிபி ரசிகர்கள் புலம்ப தொடங்கி விட்டனர். 230 ரன்களை ஆர்சிபி அடித்தாலும் பந்து வீச்சாளர்கள் இப்படி வீசுவதால் நிச்சயம் அவர்கள் தோல்வியடையும் நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. 197 என்ற இலக்கை நான்கு ஓவர்கள் மீதம் வைத்து முடிப்பதெல்லாம் சாதாரண காரியம் கிடையாது.

- Advertisement 2-

இப்படி ஒரு குழப்பமான அணியாக ஆர்சிபி இருந்து வரும் நிலையில் இந்த போட்டியில் சில விஷயங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கும் என்றும் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது குமுறத் தொடங்கி விட்டனர். இதற்கு மிக முக்கிய காரணம், இந்த போட்டியில் மூன்றாம் நடுவரின் பல முடிவுகள் மும்பை அணிக்கு சாதகமாக இருந்து வந்ததாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது ஒரு பந்தை பவுண்டரி லைனில் ஆகாஷ் தடுத்திருந்தார். இந்த பந்து பார்ப்பதற்கு ஃபோர் போன்று தெரிந்திருந்தாலும் நடுவர் ஃபோர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போல தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு நோ பால் சரியாக ரிவ்யூ செய்யப்படாத நிலையில், டிஆர்எஸ் வாய்ப்பு இல்லாமல் மும்பை அணி அப்பீல் ஒன்றை எடுத்ததாகவும் விமர்சனம் உருவாகியுள்ளது.

இதேபோல மும்பை அணி பேட்டிங் செய்த போது இஷான் கிஷன் எதிர்கொண்ட பந்து வைடு லைனுக்கு உள்ளே சென்றபோதும் நடுவர் வைடு என அறிவித்ததாக தெரிகிறது. இப்படி பெங்களூர் மற்றும் மும்பை அணி மோதிய போட்டிக்கு நடுவே நடந்த பல்வேறு விஷயங்களை ரசிகர்கள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக இருந்தார்கள் என்ற சர்ச்சையும் பூதாகரமாக வெடித்துள்ளது.

சற்று முன்