- Advertisement -
Homeவிளையாட்டுமுதல்ல பங்களாதேஷ், இப்போ பாகிஸ்தான்.. மோசமான சாதனையை செஞ்ச பாபர் அசாம் கேப்டன்சி..

முதல்ல பங்களாதேஷ், இப்போ பாகிஸ்தான்.. மோசமான சாதனையை செஞ்ச பாபர் அசாம் கேப்டன்சி..

- Advertisement-

டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு போட்டி தான் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதிய முதல் போட்டியில் 194 ரன்கள் என்ற இலக்கை மிக அசால்டாக எட்டிப் பிடித்திருந்தது அமெரிக்க அணி.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணியையும் சந்தித்திருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டனர். 98 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு சதாப் கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

கேப்டன் பாபர் அசாம் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாக 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணியும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விடுவோமா என ரசிகர்கள் பாதியிலேயே பயப்பட தொடங்கி விட்டனர்.

அப்படி இருக்கையில் கடைசி மூன்று பந்துகளில் 12 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது. இதில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோருடன் சேர்த்து 11 ரன்கள் சேர்க்கப்பட போட்டி டையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, 18 ரன்களை சேர்த்தது. 10 ரன்களுக்குள் முடிய வேண்டிய சூப்பர் ஓவரை வைடு மற்றும் ஓவர் த்ரோ என வீசி இலவசமாக 8 ரன்களை கொடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.

- Advertisement-

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, 13 ரன்கள் மட்டுமே எடுக்க யுஎஸ்ஏ அபார வெற்றி பெற்றிருந்தது. அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ந்து தான் போயுள்ளனர். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அணி, அவர்களுக்கு எதிரான முதல் டி20 தொடரை கைப்பற்றி இருந்தது.

வங்காளதேசத்திற்கு எதிராக முதல் தொடரையே வெற்றியாக மாற்றி இருந்த அமெரிக்க அணி, தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய முதல் டி 20 போட்டியையும் வென்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் ஆடும் பங்களாதேஷ் அணிக்கு பிறகு, பாகிஸ்தானையும் வீழ்த்திய பெருமையை அமெரிக்கா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்