- Advertisement 3-
Homeவிளையாட்டுODIயில் 59 போர், 8 சிக்ஸ்.. மொத்தம் 515 ரன்கள்... 450 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.....

ODIயில் 59 போர், 8 சிக்ஸ்.. மொத்தம் 515 ரன்கள்… 450 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. யாரு சாமி இவங்க, இப்படி விளையாடறாங்க.

- Advertisement-

அண்டர் 19 உலக கோப்பை போட்டிகளுக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அணியும் அர்ஜென்டினா அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் அமெரிக்க அணி மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டி உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் விலாசியது. இதில் மொத்தம் 59 பவுண்டர்களும் எட்டு சிக்ஸர்களும் அடக்கம். இந்த அணியின் துவக்க ஜோடியான செட்டிபாளையம் மற்றும் மேத்தா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர்.

- Advertisements -

செட்டிபாளையம் 61 ரன்களில் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய மேத்தா 91 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதில் 14 போர்களும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். அமெரிக்க அணியை பொறுத்தவரை இவர்தான் அதிகப்படியான சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளை அடித்தவர்.

மேத்தாவை தொடர்ந்து களத்திற்கு வந்த ரமேஷ் 59 பந்துகளில் 100 ரன்கள் விலாசினார். இதில் 13 பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். இப்படி அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ரண்களை சரமாரியாக குவிக்க அர்ஜென்டினா பவுலர்கள் செய்வதறியாது திகைத்து போனார்கள். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் எடுத்தது அமெரிக்க அணி.

- Advertisement-

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த அர்ஜென்டினா அணி 20 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியின் துவக்க வீரர்களான பினி மற்றும் மிக்லியோரெல்லி தலா நான்கு மற்றும் ஒரு ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

அந்த அணியில் ஒருவர் கூட இருபது ரன்களை கடக்கவில்லை. வ்ரூக்டென்ஹில் என்ற வீரர் மட்டும் அதிகப்படியாக 18 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் அமெரிக்க அணி 450 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் அண்டர் 19 போட்டிகளில் அதிகப்படியான ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை அமெரிக்க அணி நிகழ்த்தியுள்ளது.

சற்று முன்