- Advertisement -
Homeவிளையாட்டு‘இதயத்துடிப்பு எகிறியது’…. கடைசி ஓவர் ப்ளானை ஓப்பனாக சொன்ன - ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

‘இதயத்துடிப்பு எகிறியது’…. கடைசி ஓவர் ப்ளானை ஓப்பனாக சொன்ன – ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

- Advertisement-

நேற்றைய ஐபிஎல் போட்டியில் புள்ளிப் பட்டியலில் கீழே இருக்கும் இரு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணியில் நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் கேப்டன் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து 61 ரன்கள் எடுத்ததன் மூலம் அணி 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தங்கள் ஏழாவது தோல்வியைப் பதிவு செய்தது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் குறிப்பாக ஷர்துல் தாக்கூர் (2/23) மற்றும் வைபவ் அரோரா (2/32) மற்றும் வருண் சக்ரவர்த்தி (1/20) ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அசத்தினர்.

வருண் சக்கரவர்த்தி 20-வது ஓவரை சிறப்பாக பந்துவீசி தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.  கடைசி ஓவர் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் வெறும் 3 ரன்களே கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பின்னர் பேசிய வருண் சக்ரவர்த்தி இதயத்துடிப்பு எகிறிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் “கடைசி ஓவரில் என் இதயத் துடிப்பு 200-ஐத் தொட்டது. அவர்களை மைதானத்தின் நீண்ட பகுதியை நோக்கி அடிக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டுக் கொண்டேன். பந்து நிறைய நழுவியது. மைதானத்தின் நீண்ட பக்கமே எனது ஒரே நம்பிக்கை.

- Advertisement-

எனது முதல் ஓவரில் நான் 12 ரன்கள் கொடுத்தேன். மார்க்ரம் எனது பந்துக்ளில் 2 பவுண்டரிகள் அடித்தார். கடந்த ஆண்டு நான் மணிக்கு 85 கிமீ வேகத்தில் பந்துவீசினேன். நான் பல விஷயங்களை முயற்சித்தேன். எனது சுழல்களில் நான் பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதில் வேலை செய்தேன்.” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்