- Advertisement -
Homeவிளையாட்டுதோனி விக்கெட்டடை எடுக்க நான் இந்த யுக்தியை தான் கையாண்டேன். பைனல்ல ஜடேஜாவுக்கு இந்த மாதிரி...

தோனி விக்கெட்டடை எடுக்க நான் இந்த யுக்தியை தான் கையாண்டேன். பைனல்ல ஜடேஜாவுக்கு இந்த மாதிரி பால் போட்டுருக்கலாம் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

- Advertisement-

ஐபிஎல் முடிந்து பல நாட்கள் ஆனாலும் இன்னும் அது குறித்த தேடல்களும், பேச்சுக்களும் ஓய்ந்த பாடில்லை என்றே கூறலாம். சிஎஸ்கே தனது 5வது ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து மும்பை அணியின் வெற்றி எண்ணிக்கையை சமம் செய்தது. தோனியின் சிறப்பான தலைமை தான் சிஎஸ்கே-வின் இந்த வெற்றிக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.பி.எல் குறித்த தனது அனுபவங்களையும், சிஎஸ்கே-வோடு விளையாடியது எப்படி இருந்தது என்பது குறித்தும் KKR அணியின் பௌலரும், தமிழக வீரருமான வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக என்னுடைய ஐபிஎல் பயணம் சிறப்பாக சென்றது.

எங்கள் அணி குவாலிபை ஆகவில்லை என்பது வருத்தம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பாகவே இருந்தது என்றார். அப்போது நெறியாளர், கடந்த சில ஐபிஎல் சீசன்களில் நீங்கள் தோனியின் விக்கட்டை எடுத்துள்ளீர்கள் அல்லவா, அது குறித்து கூறுங்கள் என்றார். அது குறித்து வருண் விவரிக்கையில்,

நான் தோனியை போல்ட் செய்வதற்கு முன்பு என்னுடைய பந்தில் அவர் பௌண்டரி அடித்தார். நான் தோனியை பார்த்து பயந்தேன். அவர் நிற்கும் விதத்தை பார்த்தால் கையில் அறிவாலோடு நிற்பது போல இருக்கும். உடனே தினேஷ் கார்த்திக் என்னிடம் வந்து, அவரை பார்த்து பயப்பட வேண்டாம், ஸ்டம்ப்பை பார்த்து பந்தை வீசு. விக்கெட் விழுந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் பரவா இல்லை என்றார்.

- Advertisement-

உடனே நான் கடவுள் மீது பாரத்தை போட்டு ஸ்டம்ப்பை நோக்கி பந்தை வீசினேன். தோனி அதை தவறவிட்டதால் அது ஸ்டம்பில் பட்டது. தோனியின் விக்கட்டை எடுக்க நான் பந்தை இரண்டு விரல்களுக்கு நடுவில் வைத்து, தலைக்கு மேல் இருந்து பந்தை ரிலீஸ் செய்தேன். அந்த பந்து வெளியே செல்லும் என்று எண்ணி தோனி ஆடினார். ஆனால் பந்து உள்ளே சென்று ஸ்டம்ப்பை தட்டியது என்றார் வருண்.

அந்த போட்டியில் அப்படி விக்கெட் எடுத்த பிறகு தோனி என்னிடம் நிறைய பேசினார். அதே போல நாங்கள் எதிராணியாக இருந்தாலும் அவர் களத்திற்குள் வரும்போது எங்களுக்கு புல்லரிக்கும். அவர் வந்து விளையாட வேண்டும், சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்றார் வருண்.

இதையும் படிக்கலாமே: அம்பயர்களோட கண்ணு என்ன குருடாகிடுச்சா? ஆஸி வீரர்கள் தெளிவா பிராடு வேலை பன்றாங்க. எல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம் – கடுமையாக சாடிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

மேலும் அவர் பேசுகையில், ஐபிஎல் பைனலில், மோகித் சர்மா ஜடேஜாவிற்கு கடைசி பந்து வீசுகையில், அவர் யார்கர் வீச வேண்டும் என்று எண்ணியது சரி தான். ஆனால் அவர் அதை வைடாக வீசி இருக்க வேண்டும். ஆனால் அவர் கால் அருகே போட்டதால் ஜடேஜா அதை பௌண்டரிக்கு அனுப்பினார். ஒருவேளை அந்த பந்தை நான் வீசி இருந்தால் ஜடேஜாவிற்கு ஆப்-ஸ்பின் தான் போட்டிருப்பேன் ஆனால வைடாக போட்டிருப்பேன் என்று கூறியுள்ளார் வருண் சக்கரவர்த்தி.

சற்று முன்