- Advertisement -
Homeகிரிக்கெட்நான் ஒடஞ்சு போயிருந்த நேரத்துல ஷாருக்கான் கொடுத்த அட்வைஸ்.. எமோஷனல் ஆன வருண்..

நான் ஒடஞ்சு போயிருந்த நேரத்துல ஷாருக்கான் கொடுத்த அட்வைஸ்.. எமோஷனல் ஆன வருண்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் பல இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த சீசனில் ஏராளமான தமிழக வீரர்கள் வழக்கம் போல நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் உலக கிரிக்கெட் அரங்கிலும் அவர்கள் மீது கவனம் அதிகமாக இருந்து வருகிறது.

குஜராத் அணில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் சாய் சுதர்ஷன், அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் டாப் 5 இடத்திலும் உள்ளார். மேலும் அதே அணியில் இடம் பெற்றுள்ள மற்ற தமிழக வீரர்களான சாய் கிஷோர் மற்றும் ஷாருக்கான் ஆகியோரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி அணிக்காக வெற்றியையும் தேடித் தருகின்றனர்.

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன் தற்போது சிறப்பாக பந்து வீசி வருவதால் வேகமாக அவர் இந்திய அணியில் மீண்டும் ஒரு என்ட்ரி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதேபோல அனைத்து போட்டிகளிலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டையை கிளப்பி வருபவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.

அதிக விக்கெட் எடுத்துள்ள வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கூட நான்கு ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரிஷப் பந்த், ஸ்டப்ஸ் உள்ளிட்ட மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

-Advertisement-

வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகள் எடுக்க, வைபவ் ஆரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 17வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடிக்க ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. மேலும் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார். இதற்கு பின் அவர் பேசுகையில், “பிட்ச் ஆரம்பத்தில் இருந்ததை விட போட்டி செல்ல பந்துகள் அதிகமாக திரும்பியது. ரிஷப் பந்தை நான் அவுட் எடுத்த பந்து வேறு மைதானமாக இருந்தால் நிச்சயம் சிக்ஸர் தான் சென்றிருக்கும்.

கிரிக்கெட் என்பது ஒரு சின்ன நூலிழை வித்தியாசம் உள்ளது தான். மேலும் நான் ஸ்டெப்ஸ் விக்கெட் எடுத்தது தான் ஃபேவரைட் விக்கெட். என்னால் எப்போது சிறப்பாக பந்து வீச முடியவில்லையோ, அப்போது நரைனிடம் தான் ஆலோசனை கேட்பேன். கடைசி போட்டியில் நான் அதிக ரன்களை கொடுத்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அபிஷேக் நாயர் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட அனைவருமே என்னிடம் அதைப் பற்றி பேசி இருந்தனர். அது எனக்கு அதிக உத்வேகத்தை கொடுத்திருந்தது” என வருண் சக்கரவர்த்தி கூறினார்.

-Advertisement-

சற்று முன்