- Advertisement -
Homeவிளையாட்டுஆர்சிபி ரன் அடிக்காம.. நாங்க ரன் அடிச்சதுக்கு முக்கிய காரணமே இதான்.. உண்மையை உடைத்த வெங்கடேஷ்...

ஆர்சிபி ரன் அடிக்காம.. நாங்க ரன் அடிச்சதுக்கு முக்கிய காரணமே இதான்.. உண்மையை உடைத்த வெங்கடேஷ் ஐயர்..

- Advertisement-

ஐபிஎல் தொடர் வந்து விட்டாலே அதிகமாக இளம் வீரர்களை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எப்படிப்பட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை எதிர்த்து சிறப்பாக ஆடி தங்களின் அணியை வெற்றி பெறச் செய்வார்கள். அப்படி இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியில் தற்போது இடம் பெற்றுள்ள நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக அதை செய்து முடித்திருந்தார்.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் நின்றதுடன் 83 ரன்களும் அடித்திருந்தார். இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்யவே பெங்களூர் அணி முதல் இன்னிங்ஸில் திணறிய சமயத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் போட்டி செல்ல செல்ல ரன் சேர்க்கவே மிக எளிதாக இருந்தது.

இதன் காரணமாக கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய பிலிப்ஸ் மற்றும் நரைன் ஆகியோர் மிக அதிரடியாக ஆடி 6 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்து இருந்தனர். இவர்கள் இருவரும் அவுட் ஆன பின்னரும் கூட அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்டியதால் 17 வது ஓவரிலேயே போட்டியை முடித்து வைத்தது கொல்கத்தா அணி. வெங்கடேஷ் ஐயர் முப்பது பந்துகளில் மூன்று போர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

அவரைப் போலவே கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதால் 19 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப் பிடித்தது. ஒரு விக்கெட் கைப்பற்றி 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களுடன் 47 ரன்கள் எடுத்த சுனில் நரைன் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

- Advertisement-

அவரைப்போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் போட்டிக்கு பின் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் போட்டி செல்ல செல்ல தான் பேட்டிங் செய்வது அங்கே எளிதாக இருந்தது. இதன் மொத்த வெற்றிக்கான காரணமும் நரைனை தான் சாரும். அவரும் சால்ட்டும் இணைந்து நல்ல அதிரடியை வெளிப்படுத்தியதால் நாங்கள் நெருக்கடி இல்லாமல் பார்மாலிட்டிக்காக போட்டியை முடித்து வைத்தோம்.

எனக்கு எதிராக ஒரு இடதுகை ஸ்பின்னர் பந்து வீசும் போது அதை எதிர்த்து ஆட வேண்டும் என்பது என்னுடைய கடமை. எனது வருங்கால மனைவியும் அங்கே இருந்ததால் அவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பெங்களூர் அணியின் விசாக்கும் சிறப்பாக பந்து வீசினர். அவர் பிட்ச்சின் தன்மை அறிந்து தனது பந்தையும் சரியாக வீசியிருந்தார். அவரை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது” என தெரிவித்தார்.

சற்று முன்