- Advertisement -
Homeவிளையாட்டுசச்சின், தோனி.. ரெண்டு பேர்ல யாரு மாஸ்.. கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு வெங்கடேஷ் ஐயர் சொன்ன...

சச்சின், தோனி.. ரெண்டு பேர்ல யாரு மாஸ்.. கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு வெங்கடேஷ் ஐயர் சொன்ன பதில்..

- Advertisement-

இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டர் வீரராக இருக்கும் வெங்கடேஷ் ஐயரிடம் சச்சின் அல்லது தோனி என இருவரில் சிறந்த வீரர் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இந்திய அணியில் நிச்சயம் வருங்காலத்தில் சிறந்த ஆல் ரவுண்டராக வருவார் என கருதப்பட்டவர் தான் வெங்கடேஷ் ஐயர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இறுதி போட்டி வரைக்கும் முன்னேறி இரண்டாவது இடம் வரை பிடிக்க காரணமாக இருந்த வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியிலும் பின்னர் தேர்வாகி இருந்தார். ஆனால் அங்கே கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக ஆடி தக்க வைக்கத தவற இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி இருந்தார்.

ஆல் ரவுண்டரான அவர் பந்து வீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் கவனம் ஈர்திருந்த வெங்கடேஷ் ஐயர், தற்போது கவுண்டி கிரிக்கெட் ஆடிவரும் நிலையில் நிச்சயம் விரைவில் இந்திய அணிக்காக இடம் பிடிப்பார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் தான் சமீபத்தில் வெங்கடேஷ் ஐயரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. எப்போதும் ட்ரெண்டிங்கில் ஏதாவது ஒரு விஷயம் இருப்பது போல தற்போதும் அதே போல ஒரு நிகழ்வு இருந்து வருகிறது. அதாவது பிரபலங்கள் இரண்டு பேரின் பெயரை கேட்கும் போது அதில் ஒரு பெயரை தேர்வு செய்தால் அவர் விரும்பாதவரின் பெயர் மாற்றப்பட்டு இன்னொருவரின் பெயர் சேர்த்து இரண்டு பேரில் யார் என்ற கேள்வி கேட்கப்படும்.

- Advertisement-

அந்த வகையில் சமீபத்தில் வெங்கடேஷ் ஐயரிடம் சிறந்த வீரர் தோனியா கோலியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதில் தோனியன் பெயரை வெங்கடேஷ் ஐயர் பதிலாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோலிக்கு பதிலாக சச்சின் பெயரை சேர்த்து சச்சினா தோனியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு சில வினாடிகள் யோசித்து பின்னர் பதில் தெரிவித்த வெங்கடேஷ் ஐயர், எம். எஸ். தோனியின் பெயரை தெரிவித்திருந்தார்.

பேட்டிங்கில் தோனியை விட சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்பட்டாலும் கேப்டன்சியை பொறுத்தவரையில் அவரை விட பல சாதனைகள் செய்து சச்சினுக்கு நிகராக பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

சற்று முன்