- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனி பாண்டியா கிடையாது... அவரோட பொறுப்பு இனி இவருக்கு தான்... டிராவிட் அதிரடி தகவல்

இனி பாண்டியா கிடையாது… அவரோட பொறுப்பு இனி இவருக்கு தான்… டிராவிட் அதிரடி தகவல்

- Advertisement 1-

நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணியின் தரமான ஆல்-ரவுண்டராகவும், துணை கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடையவில்லை என்ற போதிலும், ஹர்திக் பாண்டியா விலகல் அணியின் பலத்தை சற்றே குறைத்து இருக்கிறது. ஆடும் லெவனில் சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் ஹர்திக் பாண்டியா.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. தற்போது காயத்தின் தீவிரம் காரணமாக அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பு கே.எல். ராகுலிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா காயமுற்று இருப்பதால், கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

- Advertisement 2-

முன்னதாக சமூக வலைதளத்தில் இதுபற்றிய கருத்து பதிவிட்ட ஹர்திக் பாண்டியா, இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ச்சியாக உற்சாகமூட்டுவேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும் தொடரில் இதற்கு பின் விளையாட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

“உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளை நான் தவறவிடுகிறேன் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் அணியுடன் தான் இருப்பேன், போட்டியின் ஒவ்வொரு பந்தின் போதும் அணிக்கு உற்சாக குரல் எழுப்புவேன். வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் மிகுந்த நன்றிகள். ஆதரவு அபாரமாக இருந்தது. இந்த அணி மிகவும் விசேஷமான ஒன்று, நாங்கள் எல்லோரையும் பெருமை கொள்ள செய்வோம், என்றும் அன்புடன், ஹெச்.பி.,” என ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்