- Advertisement -
Homeவிளையாட்டுதோனிக்கும் பாண்டியாவிற்கும் நடத்த ஓட்டப்பந்தயம்... 36 வயதில் சிங்கம் போல பாய்ந்த தோனி... என்ன ஒரு...

தோனிக்கும் பாண்டியாவிற்கும் நடத்த ஓட்டப்பந்தயம்… 36 வயதில் சிங்கம் போல பாய்ந்த தோனி… என்ன ஒரு ஓட்டம்

- Advertisement-

அண்மை காலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பிட்னஸ் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதிலும் தோனி இவ்வளவு பிட்னஸுடன் எப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். ஐபிஎல் தொடரின் போது சிக்ஸ் பேக்குடன் வந்த தோனியால், சக வீரர்கள் மிரண்டனர்.

இதனால் இன்னும் ஓராண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தோனியின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவையே ஓட்டப்பந்தயத்தில் தோனி வீழ்த்தி இருக்கிறார்.

2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வந்தனர். வழக்கமாக தோனியின் கேப்டன்சியில் அறிமுகமான வீரர்கள் அனைவரும் தோனியுடன் ஜாலியாக பேசி பழகுவார்கள். அப்படி தோனியின் சிஷ்யனான ஹர்திக் பாண்டியா, தோனியை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்தார்.

அப்போது மைதானத்திலேயே 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ஹர்திக் பாண்டியா – தோனி இருவரில் தோனி ஹர்திக் பாண்டியாவை அசால்ட்டாக முந்தி சென்றார். தோனிக்கு 12 வயது இளையவரான ஹர்திக் பாண்டியா, தோனியிடம் தோல்வியடைந்துள்ளார். இதன் மூலமாக அப்போதிருந்தே தோனியின் பிட்னஸ் தரம் வேற லெவன் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement-

அதேபோல் தோனியின் கேப்டன்சி கீழ் தான் இந்திய அணி வீரர்களுக்கு யோயோ டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக இந்திய அணி வீரர்கள் உடற்பயிற்சி மற்றும் பிட்னஸில் அதிக கவனம் கொண்டனர். தற்போது இந்திய வீரர்கள் பலரும் பிட்னஸுடன் இருப்பதற்கு தோனி போட்ட விதையே காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் தோனி தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவது ரசிகர்களுக்கு கூடுதல் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்