- Advertisement -

அன்று கோலி, இன்று ரோஹித்.. ரோஹிராட் நட்புக்கு இலக்கணமாக அமைந்த சூப்பர் சம்பவம்..

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தற்போது ரோஹித் ஷர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷயங்களும் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

முன்னதாக ஐபிஎல் தொடருக்கு மத்தியில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்த நிலையில் ரிங்கு சிங், கே எல் ராகுல் என்ற பலரும் இடம் பெறாமல் போனது பற்றி ஏராளமான விமர்சனங்கள் உருவாகி இருந்தது. மேலும் இது தொடர்பான பதில்களையும் அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தனர்.

- Advertisement -

சில முக்கியமான வீரர்கள் இடம்பெறாமல் போனதற்கான மிக முக்கியமான காரணமும் விளக்கப்பட்டதுடன் மட்டுமல்லாமல் இதன் காரணமாக ரசிகர்களுக்கும் அதிக தெளிவுகள் கிடைத்துள்ளது. மேலும் பிசிசிஐ மற்றும் ரோஹித் சர்மா இணைந்து வகுத்துள்ள திட்டங்கள் நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக உலக கோப்பைத் தொடரில் அமைந்து சென்ற ஆண்டு விட்ட கோப்பையை இந்த முறை பிடித்தே ஆக வேண்டும் என்றும் ரசிகர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தான் விராட் கோலி குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ரோஹித் சர்மா சொன்ன பதில் தற்போது அனைவரையும் மனம் நெகிழ்ந்து பார்க்க வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக விராட் கோலி இருந்த சமயத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அப்போது விராட் கோலியிடம் ரோஹித் சர்மாவின் டி20 ஃபார்ம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்ன விராட் கோலி, அவர் இல்லாத இந்திய டி 20 அணியா என பத்திரிகையாளருக்கு சரமாரி பதிலடி கொடுத்திருந்தார். இந்த சம்பவம் முடிந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளான நிலையில் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித்திடம் விராட் கோலியின் டி 20 ஸ்ட்ரைக் ரேட் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ரோகித் சர்மாவோ பத்திரிக்கையாளரின் கேள்வியை ஒரு பொருட்டாக மதிக்காமல், விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் ஒரு பிரச்சனை இல்லை என்பதையும் தனது சிரிப்பின் மூலமே பதிலாக சொல்லி இருந்தார். இப்படி கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டி மேற்கொண்ட விஷயங்கள், தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

- Advertisement -

Recent Posts