இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் விராட் கோலி. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவரை வைத்து பல பிராண்ட்கள் தங்கள் விளம்பரங்களை செய்து வருகின்றன. கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகமாக விளம்பரங்களில் நடிப்பவராக கோலி உள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தின் கீழ் “ஏ” கிரேட் வீரராக வரும் விராட் கோலி ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக பெறுகிறார். இது தவிர, ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் சம்பளமாக அவருக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் இருந்து விராட் கோலி ஆண்டுக்கு ரூ.15 கோடி பெறுகிறார்.
ஆனால் இதெல்லாம் அவரின் ஒரு ஆண்டு மொத்த வருவாயில் சொற்பமான வருமானம்தான். அவரின் மெயின் வருமானமே விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் வரும் வருவாய்தான். விராட் கோலி இன்று பாலிவுட் மற்றும் விளையாட்டு வீரர்களில் அதிக பிராண்ட் கட்டணம் வசூலிக்கும் பிரபலமாக உள்ளார். விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ஆண்டுக்கு 7.50 முதல் 10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். இந்த கட்டணம் ஒரு நாள் படப்பிடிப்புக்க்கு என கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த நாள் வரை நீடித்தால், அதே விகிதத்தில் கட்டணம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
விராட் கோலி தற்போது மொத்தம் 26 பிராண்டுகளுக்கு விளம்பரதாரராக உள்ளார். அதில் Vivo, Blue Star, Luxor, HSBC, Uber, Thoothsee, Star Sports, MRF மற்றும் Cynthol போன்ற பெரிய பிராண்ட்கள் குறிப்பிடத்தக்கவை. அதாவது விளம்பரங்கள் மூலம் மட்டுமே அவர் ஒரு வருடத்தில் 175 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது ஆச்சர்யபடவைக்கும் தகவலாக உள்ளது.
இதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்கள் மூலமாகவும் விராட் கோலி மேலும் வருவாய் ஈட்டி வருகிறார். சமூக வலைதள பக்கங்களை பொறுத்தவரை, ஆசியாவில், விராட் கோலிக்கு இணையாக சம்பாதிக்கும் பிரபலம் இல்லை என்றே கூறலாம். விராட் கோலி இன்ஸ்டாகிராமில் இடும் ஒரு பதிவுக்கு ரூ 8.9 கோடியும், ட்விட்டரில் இருந்து ஒரு இடுகைக்கு ரூ 2.5 கோடியும் வருவாயாக பெறுகிறார்.
இதையும் படிக்கலாமே: இது தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் இது தான். நான் என் மனைவியிடம் சொன்னது இப்படி தான் – அஸ்வின் பேச்சு
இதுமட்டுமில்லாமல் விராட் கோலியே ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வைத்துள்ளார். இதில் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட One8 கம்யூன் உணவகம், 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “Nueva” என்ற டைனிங் பார் மற்றும் உணவகம், தடகள ஆடைகளுக்கான One8 என்ற பிராண்ட், 2013 இல் இருந்து Wrogn ஆடை நிறுவனத்தில் பங்கு மற்றும் 2016 இல் தொடங்கப்பட்ட குழந்தைகளின் லைஃப்ஸ்டைல் பிராண்ட் ஸ்டெபத்லான் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்.