- Advertisement 3-
Homeவிளையாட்டுஆர்சிபிக்கு நடந்தது எல்லாம் அப்போ அதிர்ஷ்டமா.. தப்பாய் போன ரோஹித் கணக்கு.. சூப்பர் 8ல் நடக்க...

ஆர்சிபிக்கு நடந்தது எல்லாம் அப்போ அதிர்ஷ்டமா.. தப்பாய் போன ரோஹித் கணக்கு.. சூப்பர் 8ல் நடக்க போகும் ட்விஸ்ட்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 17 சீசன்களாக ஆடி வரும் விராட் கோலியால் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபித்து வந்தார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 700 ரன்களை கடந்திருந்த விராட் கோலி, அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருந்தார். அதற்கு முன்பு நடந்த ஒரு நாள் உலக கோப்பையிலும் விராட் கோலி தான் அதிக ரன்கள் அடித்திருந்தார்.

அப்படி பேட்டிங்கில் சிறப்பாக ஜொலித்து, இந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதை குறிப்பிட்டு கோலியை விமர்சனம் செய்து வந்தனர். அது மட்டுமில்லாமல் டி20 உலக கோப்பை நெருங்கி வந்த சமயத்தில் கோலியை விமர்சித்த அனைவருமே இந்திய அணிக்காக அவரைத் தான் நாடி வரவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவேசமான கருத்துக்களை பதிவிட அப்படியே நேர்மாறான விஷயங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய அணிக்காக இதுவரை மூன்று போட்டிகளில் பேட்டிங் இறங்கி உள்ள விராட் கோலி, ஒரு முறை கூட 5 ரன்களைக் கடக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மூன்று போட்டியிலும் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலி, அமெரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக்காகி அதிர்ச்சி அளித்திருந்தார்.

டி 20 உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக கோலி டக் அவுட்டாகி உள்ள நிலையில், இனிவரும் சூப்பர் 8 சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகளில் என்ன செய்வார் என இந்திய அணியின் ரசிகர்கள் பதறிப் போய் உள்ளனர். மேலும் விராட் கோலியின் பேட்டிங் நிலை குலைந்து போனதற்கு முக்கிய காரணமாக அவர் தொடக்க வீரராக களமிறங்கி வருவது தான் பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

மூன்றாவது வீரராக விராட் கோலி கலந்துள்ள டி20 போட்டிகளில் நிறைய ரன்கள் அடித்துள்ளார். ஆனால் அவர் தொடக்க வீரராக இறங்கி ஒருமுறை கூட பத்து ரன்களை கடந்தது கிடையாது. அப்படி இருக்கும்போது ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டு விராட் கோலி மூன்றாவது வீரராக வந்தால் நிச்சயம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் மீண்டும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வரும் விராட் கோலியை தொடக்க வீரராக மட்டுமே களமிறக்கி வரும் ரோஹித் மற்றும் இந்திய அணியின் முடிவும் புரியாத புதிராகவே உள்ளது.

சற்று முன்