- Advertisement -
Homeவிளையாட்டுசச்சினின் கடைசி டெஸ்டில் நடந்த சம்பவம்.. 11 வருடம் கழித்து அப்படியே பிரபலித்து காட்டிய விராட்...

சச்சினின் கடைசி டெஸ்டில் நடந்த சம்பவம்.. 11 வருடம் கழித்து அப்படியே பிரபலித்து காட்டிய விராட் கோலி..

- Advertisement-

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி பேட்டிங் இறங்கியதன் காரணமாக 11 ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை பற்றி தற்போது பார்க்க போகிறோம். கிரிக்கெட் அரங்கில் மிக முக்கியமான வீரராக இருக்கும் விராட் கோலி, கடந்த டி20 உலக கோப்பையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதி போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்திருந்தாலும் மற்ற போட்டிகளில் அந்த அளவுக்கு ஜொலிக்காமல் போனது அதிகம் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் நீண்ட ஓய்வுக்கு பின்னர் களமிறங்கி இருந்த விராட் கோலியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் கூட இதே நிலை தான் தொடர்ந்திருந்தது. இரண்டு இன்னிங்சில் சேர்த்து 23 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி ஒரு முறை கூட 20 ரன்களை கடந்து நல்லதொரு பேட்டிங்கை அமைத்துக் கொடுக்கவில்லை.

- Advertisement -

கில், ஜெய்ஸ்வால் என இளம் வீரர்களே சிறப்பாக தங்களது இடத்தை உணர்ந்து ஆடும் போது விராட் கோலி ஏன் இந்த அளவுக்கு தடுமாறுகிறார் என பலரும் கேள்வி எழுப்பியும் வந்தனர். அப்படி இருக்கையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இவை அனைத்திற்கும் விடை அளித்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணி அதிரடியாக ஆடி ரன் குவிக்க தனது பங்கிற்கு 34 பந்துகளில் 47 ரன்களையும் சேர்த்து கொடுத்திருந்தார். மேலும் தன் மீதான விமர்சனங்களுக்கும் ஓரளவுக்கு நல்ல பதிலடியை விராட் கோலி கொடுத்துள்ள நிலையில் அவரது ரசிகர்களும் தற்போது புத்துணர்ச்சி பெற்றுள்ளனர்.

- Advertisement-

இதற்கிடையே விராட் கோலி இந்த போட்டியில் ஐந்தாவது வீரராக தான் களமிறங்கி இருந்தார். பொதுவாக மூன்றாவது அல்லது நான்காவது வீரராக சர்வதேச போட்டிகளில் களமிறங்கி வரும் விராட் கோலி, இந்த முறை ரிஷப் பந்திற்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கி ஆடி இருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய டெஸ்ட் போட்டியில் தான் ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தார் கோலி. அதன் பின்னர் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஐந்தாவது வீரராக விராட் கோலி டெஸ்டில் களமிறங்கி இருந்ததும் தற்போது அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

சற்று முன்