- Advertisement -
Homeவிளையாட்டுஇது சரிப்பட்டு வராது.. கோலியால் இந்தியாவின் உலக கோப்பை கனவுக்கு ஆப்பு.. ரோஹித்துக்கு வந்த தலைவலி..

இது சரிப்பட்டு வராது.. கோலியால் இந்தியாவின் உலக கோப்பை கனவுக்கு ஆப்பு.. ரோஹித்துக்கு வந்த தலைவலி..

- Advertisement-

இந்திய அணி வெற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்த சூழலில் முதல் இரண்டு போட்டிகளில் அசத்தலான வெற்றியும் அவர்கள் ரசித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் அடிப்படையில் ஒரு சில வீரர்கள் இந்திய அணிகள் தேர்வாக இருந்த சூழலில் ஆடும் உழவன் மிகப்பெரிய சவாலாக ரோஹித் சர்மாவுக்கு இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல ஜெயித்தால் செஞ்சு சம்சமாக இருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற பலரும் தெரிவித்து வந்த சூழலில் அவர்கள் இருவரும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. அது மட்டுமில்லாமல் இந்தியனின் பந்துவீச்சும் இந்த இரண்டு போட்டிகளில் பலமாக இருந்து வரும் நிலையில் பேட்டிங் தான் கவலைக்கிடமாக உள்ளது.

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பந்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்.

அயர்லாந்துக்கு எதிராக முதல் போட்டியில் ரோஹித் சர்மா அரைச்சதம் அடித்திருந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் அவர் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை. இவர்கள் இரண்டு பேரை தவிர அனைத்து பேட்ஸ்மன்களும் சொதப்பி வருவதால் இந்திய அணி பேட்டிங்கில் நிறைய தடுமாற்றத்தை கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரராக இருந்து வரும் விராட் கோலி, இரண்டு டி20 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி இருந்தார்.

- Advertisement-

ஜெய்ஸ்வால் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருக்க, அவருக்கு பதிலாக கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக ஜொலித்த கோலியால் டி20 உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதம் இருக்க சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற அதிகம் முன்னேறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கோலி நிச்சயம் தனது பேட்டிங்கிலுள்ள தவறுகளை சரி செய்து கொண்டு ஆட வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அப்படி இருக்கையில், இதுவரை கோலி ஆடியுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் பெரும்பாலும் 3 வது வீரராக தான் பேட்டிங் செய்து வந்துள்ளார். அந்த இடத்தை தவிர தொடக்க வீரர் உள்ளிட்ட மற்ற 3 இடங்களில் பேட்டிங் செய்துள்ள கோலி, இந்த 3 முறையும் ஒற்றை இலக்க ரன்னில் தான் ஆட்டமிழந்துள்ளார். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 3 வது வீரராக களமிறங்கி பல முறை அரை சதமடித்துள்ள கோலி, இந்த முறை தொடக்க வீரராக ஆடி முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி இருந்தார்.

லீக் சுற்றுகளை தாண்டி சூப்பர் 8 சுற்றில் முக்கியமான போட்டிகள் வருவதால் நிச்சயம் விராட் கோலி மீண்டும் 3 வது வீரராக களமிறங்குவது தான் சரியாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால், ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கி 3 வது வீரராக கோலி ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்