- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித் சாதனை.. கோலிக்கு சோதனை.. டி 20 உலக கோப்பையில் முதல் இந்திய பேட்ஸ்மேனாக கிங்கிற்கு...

ரோஹித் சாதனை.. கோலிக்கு சோதனை.. டி 20 உலக கோப்பையில் முதல் இந்திய பேட்ஸ்மேனாக கிங்கிற்கு நடந்த பரிதாபம்..

- Advertisement-

இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தி உள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் பல ரசிகர்கள் ஒரு சிறிய ஏக்கத்திலும் இருந்து வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தான்.

ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் இருந்தபோது கோலியின் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்க, ரசிகர்கள் அதிகம் பேர் அவரை விமர்சித்தனர். டி20 உலக கோப்பை என வரும்போது நீங்கள் நிச்சயம் அவரைத்தான் தேடி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கம்பீரத்துடன் வார்த்தைகளை விட்டிருந்தனர்.

ஆனால் இதுவரை 6 போட்டிகளில் இந்திய அணி ஆடி வெற்றி பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட விராட் கோலியின் பங்களிப்பால் அவர்கள் வெல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. லீக் போட்டிகளில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, சூப்பர் 8 போட்டிகளில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகத்தான் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளை சூப்பர் 8 சுற்றில் தொடர்ந்து வீழ்த்த முடிந்ததுடன் அரை இறுதிக்கும் எளிதாக முன்னேறவும் முடிந்திருந்தது. ஆனால் கோலியோ லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்க, அடுத்த மூன்று சூப்பர் 8 போட்டிகளில் சேர்த்து 61 ரன்கள் தான் எடுத்துள்ளார்.

- Advertisement-

அதிலும் லீக் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக டக் அவுட்டாகி இருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தது ரசிகர்களுக்கு வேதனையையும் கொடுத்துள்ளது. மொத்தம் ஆறு போட்டிகளில் ஆடி 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள விராட் கோலியால் ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் ஏங்கித்தான் போயுள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் தான் மற்றொரு மோசமான சாதனையை முதல் இந்திய கிரிக்கெட் வீரராக டி20 உலக கோப்பை தொடரில் படைத்துள்ளார் கோலி. அதாவது ஒரே டி20 உலக கோப்பையில் இரண்டு முறை டக் அவுட்டான முதல் இந்தியன் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி.

இன்னொரு புறம் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கும் ரோஹித்துடன் நிலைத்து நின்று நல்லதொரு ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தினாலே நாக் அவுட் போட்டிகளில் எதிரணியினருக்கு சவாலாக இருக்கலாம். இதற்கு முன்பாக விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் அவுட் ஆகி இருந்தபோதும் இதுபோல பல விமர்சனங்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தது போல் நிச்சயம் அரையிறுதி போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தான் யார் என்பதை நிரூபிப்பார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சற்று முன்