- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் தொடரில் முதல் ஆளாக சரித்திரம் படைத்த விராட் கோலி.. ஏணி வெச்சா கூட ரோஹித்தால...

ஐபிஎல் தொடரில் முதல் ஆளாக சரித்திரம் படைத்த விராட் கோலி.. ஏணி வெச்சா கூட ரோஹித்தால எட்ட முடியாது..

- Advertisement 1-

முதல் 8 போட்டிகளில் முடங்கி போயிருந்த ஆர்சிபி அணி, அடுத்த 6 போட்டிகளில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய விஸ்வரூபத்தையும் எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தொடங்கிய வெற்றிப் பயணம், அடுத்தடுத்து குஜராத்தை 2 முறையும், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக வெற்றியும் பெற்று தற்போது பிளே ஆப் வரைக்கும் வந்து விட்டனர்.

அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தங்களின் கடைசி லீக் போட்டியில், த்ரில்லாக வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணியின் ரசிகர்கள் அதனை ஏதோ திருவிழா போல கொண்டாடி இருந்தனர். சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் ஃபைனல் உள்ளிட்ட பல முக்கியமான தோல்வி அடைந்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை அனைத்திற்கும் சேர்த்து பதிலடி கொடுத்ததால், ஏதோ ஐபிஎல் ஃபைனல் வென்றது போல அதனை கொண்டாடி தீர்த்தனர்.

தொடர்ந்து ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தினாலே இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து தங்களின் ஆதரவையும் தெரிவித்து வந்தனர். அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளை அவர்கள் வென்றிருந்ததால் நிச்சயம் அனைத்து அணிகளுக்குமே சவால் கொடுக்கும் வகையில் விளங்கினர்.

இதில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கடந்த ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக சில வீரர்கள் பங்காற்றி வந்தாலும் அவர்கள் தோல்வி அடைந்து துவண்டு போன சமயத்திலும் கூட அந்த அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்திருந்தவர் தான் விராட் கோலி. இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி 741 ரன்களை எடுத்துள்ளது மட்டுமில்லாமல் ஏறக்குறைய ஆரஞ்சு கேப்பையும் அவர்தான் வெல்ல போகிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement 2-

இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு 700 ரன்களை ஒரே சீசனில் கடந்திருந்த அவர், மீண்டும் ஒருமுறை இந்த சீசனில் 700 ரன்களைக் கடந்து அனைவரையும் அசர வைத்திருந்தார். இந்நிலையில் தான் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லையும் ஐபிஎல் வரலாற்றில் தொட்டு அசத்தியுள்ளார் விராட் கோலி.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 33 ரன்களை சேர்த்திருந்த விராட் கோலி, சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருந்தார். ஆர்சிபி அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக பார்க்கப்பட்டாலும், 33 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே 8000 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஷிகர் தவான், 6769 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்