- Advertisement -
Homeவிளையாட்டுபங்களாதேஷ் டெஸ்ட் தொடரில்.. கோலி நொறுக்க வாய்ப்புள்ள 3 முக்கிய சாதனைகள்.. டான் பிராட்மேன் ரெக்கார்டுக்கும்...

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில்.. கோலி நொறுக்க வாய்ப்புள்ள 3 முக்கிய சாதனைகள்.. டான் பிராட்மேன் ரெக்கார்டுக்கும் ஆப்பு..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக தற்போது இருந்து வருபவர் தான் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் எப்படி ஒரு காலத்தில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினாரோ அவரை போலவே தற்போதைய கிரிக்கெட் தலைமுறையில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி வந்த வண்ணம் உள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பலரும் ஏதேனும் ஒரு வடிவிலான போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கோலி நம்பர். 1 வீரராகவும் இருந்து வருகிறார். டி20 போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள கோலி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வருகிறார்.

இப்படி பல மகத்தான விஷயங்கள் விராட் கோலி பக்கம் இருந்தாலும் தற்போது முக்கியமான போட்டிகளில் அவரது ஃபார்ம் கேள்விக்குறியாகவே உள்ளது. டி20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பு வரை ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பி இருந்தார் கோலி.

ஆனால், உலக கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் ரன் அடிக்க முடியாமல் திணறிய கோலி, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சொதப்பி இருந்தார். அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் இருக்க, கோலியின் பேட்டிங்கில் உள்ள பிரச்சனைகள் நிச்சயம் சரி செய்யப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement-

அப்படி இருக்கையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சில முக்கியமான சாதனைகளை கோலி படைக்க உள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். இதுவரை 29 டெஸ்ட் கிரிக்கெட் சதங்கள் அடித்துள்ள கோலி, இன்னும் ஒரே ஒரு சதத்தை அடித்தால் டான் பிராட்மேனை அந்த வரிசையில் முந்தி விடலாம்.

டான் பிராட்மேன் இதுவரை 29 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள நிலையில், அதை முறியடித்து முன்னேறவும் கோலிக்கு தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. இதே போல, இன்னும் 152 ரன்களை கோலி இந்த 2 டெஸ்டில் அடித்தால் 9000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெறலாம். அத்துடன் இங்கிலாந்து ஜாம்பவான் கிரஹாம் கூச்சின் டெஸ்ட் ரன்களை (8900) கடக்கவும் முடியும்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய சாதனையாக, பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன் அடித்த 3 வது இந்திய வீரரான புஜாராவின் சாதனையையும் கோலி முறியடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. புஜாரா 468 ரன்களை பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்டில் அடித்துள்ளார். இதுவரை அந்த அணிக்கு எதிராக 437 ரன்கள் சேர்த்துள்ள கோலி, இன்னும் 32 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் பங்களாதேஷிற்கு எதிராக டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3 வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்