- Advertisement 3-
Homeவிளையாட்டுரசிகர்களை ஏங்க வைத்த சாம்பியன்கள்.. உலக கோப்பைக்கு முன்பே ரோஹித்திடம் கோலி கொடுத்த எமோஷனல் வாக்கு..

ரசிகர்களை ஏங்க வைத்த சாம்பியன்கள்.. உலக கோப்பைக்கு முன்பே ரோஹித்திடம் கோலி கொடுத்த எமோஷனல் வாக்கு..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றது ஒரு பக்கம் மிக மகிழ்ச்சியான, எமோஷனல் தருணமாக இருக்க இன்னொரு பக்கம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏங்க வைத்திருந்தது மற்றொரு இரண்டு முக்கியமான வீரர்களின் முடிவு.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் பின்னால் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் ஆட மாட்டார்கள் என பலரும் பரவலாக தெரிவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் ஆடும்போது தான் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியும் என்றும் பலரும் கோலி மற்றும் ரோஹித்தின் வயதை டி20 போட்டியில் ஒரு விமர்சனமாக குறிப்பிட அதை அனைத்தையும் இந்த இரண்டு பேர் தற்போது சுக்கு நூறாக்கி உள்ளனர்.

தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று தென்னாபிரிக்க அணியை இறுதி போட்டியில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விக்கெட்டுகள் சென்று கொண்டே இருக்க அக்சர் படேல் மற்றும் கோலி ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதுவரை ஒரு போட்டியிலும் அரைச்சதம் அடிக்காமல் இருந்து வந்த விராட் கோலி, இந்த முறை 26 ரன்கள் அடித்து இந்திய அணி நல்ல ஸ்கோர் எட்டவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். தென்னாபிரிக்க அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே போதுமென்ற நிலை இருந்தது. ஆனாலும் பும்ரா, ஹர்திக் பாண்டியா என அனைவரும் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததுடன் மட்டும் இல்லாமல் 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பை வெல்லவும் உதவி இருந்தனர்.

- Advertisement 2-

இந்த கோப்பையை வென்றதுக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற கோலி பேசியிருந்த போது, இதுவே தனது கடைசி டி20 போட்டி என்றும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவைத்தான் எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த கேப்டன் ரோஹித், டி20 சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வினையும் உறுதி செய்திருந்தார்.

இதைவிட சிறந்த தருணம் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அமையாது என்றும் இந்த கோப்பையை வெல்வது மட்டும் தான் தன்னுடைய பெரிய விருப்பமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கோப்பையுடன் அவர் ஓய்வினை அறிவிப்பது சிறந்த தருணம் என்றும் ரோஹித் குறிப்பிட்டிருந்த நிலையில் கோலி குறித்து தெரிவித்த மற்றொரு கருத்தும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

“டி20 உலக கோப்பைத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாகவே தான் டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவிக்க போவதாக கோலி எங்களிடம் கூறி இருந்தார். சாம்பியன் வீரரான அவர், டி20 உலக கோப்பை வென்று ஓய்வு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என ரோஹித் கூறியுள்ளார்.

விராட் கோலி, ரோஹித் கைக்கு எட்டாமல் இருந்து வந்த ஐசிசி கோப்பையை அவர்கள் சொந்தமாக்கிய டி20 போட்டியில் பிரியா விடை கொடுத்தது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சற்று முன்