- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்போ சூப்பர் 8-ல நமக்கு கோவிந்தாவா.. கலீல் அகமதால் விரக்தியில் இருக்கும் விராட் கோலி..

அப்போ சூப்பர் 8-ல நமக்கு கோவிந்தாவா.. கலீல் அகமதால் விரக்தியில் இருக்கும் விராட் கோலி..

- Advertisement 1-

இந்திய அணி தற்போது லீக் போட்டிகளை அருமையாக முடித்து இருந்தாலும் அடுத்ததாக ஆரம்பமாக உள்ள சூப்பர் 8 போட்டிகள் நிச்சயம் சவால் நிறைந்துதான் இருக்கப் போகின்றது. இந்திய அணி இடம் பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இருப்பது போல தோன்றினாலும் இதில் ஆஸ்திரேலியா மட்டுமே பலம் வாய்ந்த அணியாக பலரும் கருதி வருகின்றனர்.

ஆனால் உண்மையை சொல்லப்போனால் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் பல பெரிய அணிகளுக்கு எதிராக மிகத் திறம்பட விளையாடி வெற்றிகளையும் குவித்துள்ள அணிகள் தான். இதனால் சூப்பர் 8 சுற்று இந்திய அணிக்கு நிச்சயம் எளிதாக இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதே வேளையில், லீக் தொடரில் மூன்று போட்டிகள் ஆடி இருந்த விராட் கோலி மொத்தமாக 5 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

சூப்பர் 8 போட்டிகளில் நிச்சயமாக அவர் ஃபார்முக்கு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் இந்திய அணி இருக்கும் நிலையில் மைக்கேல் வாகன் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும் நிச்சயம் விராட் கோலியை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும் முக்கியமான கட்டத்தில் அவர் ஃபார்மிற்கு திரும்பி விடுவார் என்றும் நம்பிக்கையுடன் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை சந்திக்க உள்ளது. இதற்கான பயிற்சிகளிலும் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில் ஆடும் லெவனில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் சுழற்பந்து வீச்சுக்கு பிட்ச்கள் கை கொடுக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை மாற்றிவிட்டு குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

மிக தீவிரமாக வலைப்பயிற்சியில் குல்தீப் ஈடுபட்டு வரும் நிலையில் கோலி தற்போது செய்து வரும் மிகப்பெரிய தவறு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சூப்பர் 8 போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ள விராட் கோலி, ரிசர்வ்டு வீரராக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதின் பந்தை எதிர்கொள்ள திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

குல்தீப் யாதவின் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி வரும் விராட் கோலி, கலீல் அகமதின் பந்தை சரியாக ஆட முடியாமல் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, விராட் கோலியும் கடும் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளதால் அந்த அணியில் பசல்ஹக் பரூக்கி உள்ளிட்ட பலரும் வேகப்பந்து வீச்சில் சிறந்த ஃபார்மில் உள்ளனர். இதனால் இன்னும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு பேட்டிங்கில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு விராட் கோலி களமிறங்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

சற்று முன்