- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி செஞ்சதை விமர்சிக்க.. கோலியை கொண்டாடும் ரசிகர்கள்.. ப்ராக்டிஸ் மேட்ச்ல இத கவனிச்சீங்களா..

தோனி செஞ்சதை விமர்சிக்க.. கோலியை கொண்டாடும் ரசிகர்கள்.. ப்ராக்டிஸ் மேட்ச்ல இத கவனிச்சீங்களா..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பைத் தொடரில் நிறைய சிறிய அணிகள் இடம்பிடித்துள்ளதால் அவர்கள் ஆடும் போட்டிகள் பெரிய அளவில் விறுவிறுப்பு நிறைந்து இருக்காது என்று தான் கருதப்பட்டது. ஆனால், கனடா மற்றும் அமெரிக்கா என இரண்டு சிறிய அணிகள் மோதிய உலக கோப்பைத் தொடரின் முதல் போட்டியே அட்டகாசமாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி, 194 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய அமெரிக்கா, 18 வது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அமெரிக்க வீரர் ஆரோன் ஜேம்ஸ் 10 சிக்ஸர்களுடன் 40 பந்துகளில் 94 ரன்கள் எடுக்க, க்றிஸ் கெயில் உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனையையும் நெருங்கி உள்ளார்.

இதனால், அமெரிக்காவிற்கு பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகளுடன் போட்டிகள் இருப்பதால் அதிலும் தீப்பொறியாக பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தங்களின் முதல் லீக் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக வரும் ஜூன் ஐந்தாம் தேதி ஆடவுள்ளது.

முன்னதாக, இந்திய அணி தங்களின் ஒரே ஒரு பயிற்சி போட்டியில் வங்காளதேச அணியை எதிர்த்து ஆடி இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டும் சாதகமாக அமைய, 60 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக அவர்களையும் வீழ்த்தி இருந்தனர். இதில், ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல கம்பேக்கை கொடுத்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

- Advertisement 2-

இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் இந்திய வீரர் விராட் கோலி செய்த விஷயம் ஒன்று தற்போது பெரிய அளவில் விவாதமாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஆடி வரும் விராட் கோலி, இந்த முறை முதல் பாதி லீக் போட்டிகளில் பேட்டிங் செய்த போது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தார். டி 20 போட்டிகளில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் கோலி ஆட, இதனை பிரபலங்கள் வரை விமர்சித்து வந்தனர்.

ஆனால், அதனைக் கண்டு வெகுண்டெழுந்த கோலி, பின்னர் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தி ஆரஞ்சு கேப்பையும் வென்றிருந்தார். தொடர்ந்து தற்போது டி 20 உலக கோப்பை அணிக்காக சமீபத்தில் அமெரிக்கா வந்தடைந்திருந்தார் கோலி. கடைசி நேரத்தில் அவர் வந்து சேர்ந்ததால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவரால் ஆட முடியவில்லை.

அப்படி இருந்தும் இந்த போட்டி முடிந்த பின்னர், முதல் ஆளாக வங்காளதேச வீரர்களுடன் கைகுலுக்கி இருந்தார் கோலி. இதனை ஒரு பக்கம் ரசிகர்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால், போட்டி முடிந்தால் அணியில் ஆடாமல் போனவர்கள் கூட கைகுலுக்குவது இயல்பான வழக்கம் தான் என்றும் கோலியை பாராட்டும் ரசிகர்களை விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம், ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் தோனி கைகுலுக்காமல் போனதை தான் இப்படி மறைமுகமாக குத்தி காண்பிக்க கோலியை கொண்டாடுகின்றனர் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்