- Advertisement 3-
Homeவிளையாட்டுஜோக் காட்டுறீங்களா.. ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் ஜடேஜாவை முந்திய கோலி.. இதென்னடா ஜட்டூவுக்கு வந்த சோதனை..

ஜோக் காட்டுறீங்களா.. ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் ஜடேஜாவை முந்திய கோலி.. இதென்னடா ஜட்டூவுக்கு வந்த சோதனை..

- Advertisement 1-

ரவீந்திர ஜடேஜாவுக்கு டி20 உலக கோப்பை சிறந்த தொடராக அமையவில்லை என்ற ஒரு சூழலில் மற்றொரு ரேங்கிங் தொடர்பான தகவல் இன்னும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றே தெரிகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து தங்களின் ஓய்வினை அறிவித்திருந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக டி20 போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த இந்திய வீரர் மூவரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் போட்டி உள்ளிட்டவற்றில் அடுத்து கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனிடையே ஒரு ஆல் ரவுண்டர் வீரராக இந்த முறை களமிறங்கி இருந்த ஜடேஜாவால் எந்த போட்டியிலும் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அரையிறுதி போட்டியில் மட்டும் நல்லதொரு பேட்டிங்கை கடைசியில் வெளிப்படுத்தி இருந்த ரவீந்திர ஜடேஜா, ஆறு போட்டிகளில் பந்து வீசி ஒரு விக்கெட் மட்டும் தான் எடுத்திருந்தார். இந்த முறை ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா என இந்திய அணியில் ஏராளமான ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றிருக்க அவர்களுக்குள் ஒவ்வொருவரையும் நிரூபிக்க கடுமையான போட்டி தான் இருந்து வந்தது.

இதனால் சவாலான ஒரு சூழலில் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. இதனால் சூப்பர் 8 போட்டிக்கு பின்பு அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கக் கூடாது என்றும் அவருக்கு பதிலாக சாம்சன், சாஹல் அல்லது ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர்.

- Advertisement 2-

வீரர்களாக பலர் சொதப்பி இருந்தாலும் ஒரு அணியாக இந்தியா சிறப்பாக செயல்பட்டதால் ரோஹித் ஷர்மா தனது அணியில் பெரிய அளவில் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. இதனால் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை ஆடும் வாய்ப்பையும் ரவீந்திர ஜடேஜா பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இதற்கு மேலும் டி20 போட்டிகளில் ஜடேஜா ஆடுவது சரியாக இருக்காது என்று ரசிகர்களே விமர்சனமும் செய்ய தொடங்கி விட்டனர்.

இதன் காரணமாகத்தான் நெருக்கடிக்கு மத்தியில் தனது ஓய்வையும் ஜடேஜா அறிவித்திருந்ததாகவும் சில பரபரப்பு கருத்துக்கள் வெளியாகியிருந்தது. டி20 போட்டிகளில் தடுமாறும் ஜடேஜா நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க மிகப்பெரிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் டி20 சர்வதேச போட்டிகளில் ஜடேஜா பிடித்துள்ள இடமும் கோலி உள்ள இடமும் தற்போது மிகப்பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

பெரிய அளவில் இந்திய அணிக்காக பேட்ஸ்மேனாக ஆடியுள்ள விராட் கோலி, டி20 சர்வதேச ஆல் ரவுண்டர் ரேங்கிங் பட்டியலில் 85 வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அவரைவிட அதிக போட்டிகளில் பந்து வீசி, பேட்டிங்கும் செய்துள்ள ஜடேஜா, 95 வது இடத்தில் உள்ளார். அந்த அளவுக்கு ஜடேஜாவின் சமீபத்திய டி20 சர்வதேச போட்டிகளில் வெளிப்பாடு இருந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இரண்டு பேரும் ஓய்வை அறிவித்து விட்டார்கள் என்பதால் கோலி இடத்தை இனி ஜடேஜாவால் தாண்டவே முடியாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா டி20 ஆல் ரவுண்டர் ரேங்கிங் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து அக்சர் படேல் 19 வது இடத்திலும் உள்ளார்.

சற்று முன்