Homeகிரிக்கெட்ரசிகர்கள் ஏக்கத்தையும் மீறி.. விராட் கோலி எடுத்த துணிச்சலான முடிவு.. இனிதான் இருக்கு கச்சேரி..

ரசிகர்கள் ஏக்கத்தையும் மீறி.. விராட் கோலி எடுத்த துணிச்சலான முடிவு.. இனிதான் இருக்கு கச்சேரி..

-Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி எந்த தொடரில் மோதினாலும் அது பற்றிய அறிவிப்பு வரும் போதே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவல் உருவாகி விடும். அப்படி இருக்கும் போது இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பற்றிய அறிவிப்பு வந்த போதே ரசிகர்கள் அதனை எதிர்பார்து கொண்டாட தொடங்கி விட்டனர்.

ஆனால், இந்த உற்சாகம் டெஸ்ட் தொடர் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் போது ரசிகர்களை சற்று வேதனை அடையவும் வைக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டும் தான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, திடீரென சில தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது ரசிகர்களை வேதனை அடைய செய்திருந்தது.

-Advertisement-

இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய அதில் சிறப்பாக பங்காற்றி இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர், காயம் காரணமாக அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது. கோலி, ராகுல், ஜடேஜா என பெரிய தலைகள் இல்லாமல் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, முழுக்க முழுக்க போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதனால், இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்திருந்தது. மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

ஆனால் அதே வேளையில், இதனை சுற்றி பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் உருவாகி தான் வருகிறது. 3 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி தான் ஆரம்பமாகும் என்பதால் மிகவும் பொறுமையாக அணியை அறிவிக்கலாம் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தான் தெரிகிறது. ஏனென்றால், ஜடேஜா, ராகுல் உள்ளிட்டோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருவதால், அவர்களில் ஒருவரோ அல்லது இருவரும் கூட 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அதே வேளையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் விராட் கோலி, மிஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது பற்றிய சில தகவல்களும் வெளியாகி உள்ளது. கோலி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால் பல்வேறு காரணங்களும் பரவி வர, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் தான் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருவதாகவும் உறுதியான தகவல் கிடைத்தது.

அப்படி இருக்கையில், தனது குடும்பத்தினருடன் நேரத்தை இன்னும் செலவழிக்க கோலி முடிவு செய்திருப்பதாகவும், இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கூட ஆடாமல் அவர் விலகலாம் என்றும் தெரிகிறது. ரசிகர்கள் பலரையும் கோலியின் முடிவு கலங்க செய்தாலும் குடும்பத்தினருக்காக அவர் எடுத்த முடிவை பலரும் பாராட்டியும் கூட வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்