- Advertisement -
Homeவிளையாட்டுவிராட் கோலி செய்ய போகும் தியாகம்.. உலக கோப்பைக்காக இந்திய அணி திட்டம்

விராட் கோலி செய்ய போகும் தியாகம்.. உலக கோப்பைக்காக இந்திய அணி திட்டம்

- Advertisement-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து தற்போது குணமடைந்து வருகின்றனர்.

அவர்கள் உலகக்கோப்பை தொடருக்கு திரும்பினால் இந்திய அணியில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் உலக கோப்பை தொடருக்கு முன் மேட்ச் பிராக்டிஸ் எடுக்க வேண்டிய சூழலில் இருவரும் இருக்கிறார்கள்.தங்களது உடல் தகுதியை நிரூபிப்பதை விட தங்களுடைய பார்மை இரு வீரர்களும் நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் கே எல் ராகுலை வைத்து விக்கெட் கீப்பராக களம் இறக்கலாம் என்று பிசிசிஐ முடிவெடுத்தது. தற்போது ராகுலும் இல்லை என்றால் அந்த இடத்திற்கு இசான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

சஞ்சு சாம்சன் அணியில் தேர்வானால் அவருக்கு பேட்டிங்கில் நடுவரிசை கிடைக்கும் அதுவே இஷான் கிஷன் களம் இறக்கப்பட்டால் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement-

இதனால் கில் நம்பர் 3வது வீரராக உலகக் கோப்பை தொடரில் களம் இறக்க கூடும். இதனால் மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த விராட் கோலி பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ராகுல் டிராவிட் நடைமுறைப்படுத்தினால் அது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும்.

ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முதல் மூன்று இடங்கள் உறுதியாக இருக்கிறது. இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிசன் இல்லை சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு நடுவரிசைதான் கொடுக்க வேண்டுமே தவிர தொடக்க இடத்தை கொடுக்கக் கூடாது என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

ஏற்கனவே டிராவிட கேப்டனாக இருந்தபோது தொடக்க வீரராக இருந்த சச்சினை நாலாவது இடத்தில் களம் இறக்கி 2007 உலகக் கோப்பையே இந்திய அணி தோற்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்