- Advertisement 3-
Homeவிளையாட்டுதைரியமான ஆளு.. ஆனா பங்களாதேஷ்க்கு எதிரா அந்த மேட்ச் ஆடுறப்போ பயந்துட்டே இருந்தேன்.. கோலி வெளிப்படை..

தைரியமான ஆளு.. ஆனா பங்களாதேஷ்க்கு எதிரா அந்த மேட்ச் ஆடுறப்போ பயந்துட்டே இருந்தேன்.. கோலி வெளிப்படை..

- Advertisement 1-

இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் துணிச்சலான தைரியம் வாய்ந்த வீரர் என்றால் நிச்சயம் விராட் கோலியை சொல்லலாம். ஆனால் இவர் வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு போட்டிக்காக மிகவும் பதற்றுடன் களமிறங்கினார் என்றால் நம்ப முடிகிறதா. அதை பற்றி அவரே தெரிவித்துள்ள கருத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் ஒரு சில தினங்களில் ஆரம்பமாக உள்ளதால் தற்போது அதனை பற்றியும், இதற்கு முன்பாக ஆடிய உலகக் கோப்பை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றியும் பிரபல வீரர்கள் தங்களின் நினைவுகளை வார்த்தைகளாகவும் விவரித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், இன்று அதிக பலத்துடன் இருக்கும் விராட் கோலி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆடவில்லை என்றாலும் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை அணியில் இடம்பிடித்திருந்தார். அது தான் அவருக்கு முதல் உலகக்கோப்பை தொடராக அமைந்திருந்தது. அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத சமயத்தில் தான் உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

அதே வேளையில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், கம்பீர், தோனி உள்ளிட்ட பல சீனியர் வீரர்களுடன் இணைந்து விராட் கோலியும் களமிறங்க அந்த தருணமே பட்டாம்பூச்சி மனதில் பறப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement 2-

இந்த நிலையில்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் உலகக் கோப்பை போட்டியை ஆடியது பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் கோலி. “பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2011 ல் ஆடிய போட்டி தான் எனது முதல் உலகக் கோப்பை போட்டி. அப்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் பொய் சொல்லவில்லை. உலக கோப்பைக்காக நீங்கள் முதல் முறை ஆடும்போது ஒரு அதிகமான உற்சாகம் இருக்கும். அந்த உணர்வையும் அப்போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த அணியிலேயே நான் மிக இளம் வீரராக இருந்ததுடன் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த தலைசிறந்த வீரர்களுடன் ஆடும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. ஆனால் முதல் உலகக் கோப்பை போட்டி என்ற பதட்டத்தில் இருந்ததாலேயே எனது உடலும், மனமும் சூழ்நிலைக்கு ஏற்ப தயாராகி இருந்ததால் மிக கவனமாக அந்த போட்டியில் ஆடி ரன் சேர்த்து எனது திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி இருந்தேன்” என கோலி கூறி உள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்கள் அடிக்க சேவாக் 175 ரன்களும், விராட் கோலி தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலே சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்