- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனியா?.. டிவில்லியர்ஸா?.. உங்க ஃபேவரைட் யார்.. சிரித்துக் கொண்டே நச்சுன்னு கோலி சொன்ன பதில்..

தோனியா?.. டிவில்லியர்ஸா?.. உங்க ஃபேவரைட் யார்.. சிரித்துக் கொண்டே நச்சுன்னு கோலி சொன்ன பதில்..

- Advertisement-

சிறந்த கிரிக்கெட் வீரன், சிறந்த கேப்டன் என்பதை தாண்டி பலருக்கும் நெருங்கிய நண்பராகவும் இருந்து வருபவர் தான் தோனி. சர்வதேச போட்டிகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வினை அறிவித்திருந்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அதே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஆடுவது குறித்து இன்னும் முடிவுகள் எட்டப்படாமல் இருந்து வருகிறது.

முன்னதாக, தோனி சர்வதேச அரங்கில் கேப்டனாக இருந்த போது துணை கேப்டனாக கோலி இருந்து வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சகோதர பிணைப்பும் இருந்து வந்த நிலையில் இன்றளவிலும் அந்த நட்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் கோலி அணிகள் மோதி கொள்ளும் போது கூட அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே சில நிமிடங்களை கழிப்பது தொடர்பான வீடியோ ரசிகர்களையும் பெரிய அளவில் உற்சாகப்படுத்தும்.

- Advertisements -

பலமுறை தோனி பற்றி பேசும் போது மனம் நெகிழ்ந்து நிறைய உணர்ச்சிகரமான விஷயங்களையும் கோலி நினைவு கூர்ந்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தோனியுடன் இப்படி ஒரு சிறந்த உறவில் கோலி இருந்து வருவது நிச்சயம் பெரிய விஷயம் தான். தோனியை எப்படி ஒரு சகோதரனை போல கோலி பார்த்து வருகிறாரோ அதே போல தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்சும் கோலிக்கு அப்படித்தான்.

கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் இணைந்து ஆர்சிபி அணிக்காக நிறைய போட்டிகளில் இணைந்து அதிக ரன்களை சேர்த்துள்ளனர். அவர்களின் பல பார்ட்னர்ஷிப் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான சாதனைகளையும் படைத்துள்ளது.

- Advertisement-

ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்தாலும் இன்னும் கோலியுடன் நட்பாக தான் பழகி வருகிறார். கோலியை பற்றி எந்த விமர்சனங்கள் உருவானாலும் முதல் ஆளாக அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்து வரும் சூழலில், தோனி – கோலி போல டிவில்லியர்ஸ் – கோலி நட்பும் பலமாக தான் இருந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் கோலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விராட் கோலி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், ‘டிவில்லியர்ஸ் அல்லது தோனி ஆகிய இருவரில் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு கோலி என்ன பதில் சொல்வார் என அனைவருமே எதிர்பார்க்க, இரண்டு பேருமே என சிரித்துக் கொண்டே கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

சற்று முன்