கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக விளங்கும் கோலி, புதிய சாதனைகளை படைப்பதும், கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வத்திலும் புகழ்பெற்றவராய் இருக்கிறார். ஒரு மனிதனுக்கு வெற்றி வரும்போதெல்லாம் அதனோடு சேர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்போம், அழுத்தங்களுக்கும் கூடவே வருவது இயல்பு தான். அதற்க்கு கோலி விதிவிலக்கல்ல.
கோலியை பொறுத்தவரையில் ஏதாவது ஒரு விமர்சனத்தை அவர் பெரும்பாலான நேரங்களில் எதிர்கொண்டு தான் உள்ளார். அந்த வகையில் தற்போதும் அவர் ஒரு விமர்சனத்திரிக்கு ஆளாகி உள்ளார். இந்திய அணி தற்போது ஓவலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலகக்கோப்பை டெஸ்ட் பைனலில் ஆடி வருகிறது. அதில் வீரர்கள் பலர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர்.
கோலியை பொறுத்தவரையில், இந்த போட்டிக்கு முன்பு வரை அவர் நல்ல பார்மில் இருந்தார். ஐபிஎல் தொடரில் அவர் 2 சதங்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அவருக்கு விருப்பமான எதிராணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியை அவர் தற்போது எதிர்கொண்டுள்ளார். இதில் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கில் சிறப்பான பந்து வீச்சால் கோலி 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது. கோலி அவுட் ஆன சற்று நேரத்தில் கேமரா ட்ரெஸ்ஸிங் ரூம் பக்கம் திருப்பப்பட்டது. அங்கு கோலி, சுப்மன் கில், இஷான் கிஷான் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரோடு பேசிக்கொண்டு உணவருந்திக்கொண்டிருந்தார்.
இந்த ஒரு நிகழ்வு தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், இந்திய அணி சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் வேலையில் கோலியும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டை எளிதாக விட்டுவிட்டு சந்தோசமாக உணவருந்திகொண்டுள்ளனர். இதற்க்கு அவர்களது ரசிகர்கள் ஐபிஎல்-ஐ காரணம் காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய அணி மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை என்ற வகையில் பதிவுகள் வர துவங்கியது.
இந்த நிலையில், 3வது நாள் போட்டி துவங்குவதற்கு முன்பு, கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தன் மீதுள்ள விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு கருத்தை பதிவிட்டுளளார். அதில் அவர் “மற்றவர்களின் கருத்துகளின் சிறையிலிருந்து உங்களை விடுவிப்பதற்க்கு, உங்களை பிடிக்காமல் போகும் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்பது அந்த கருத்து. இது தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.