- Advertisement -
Homeவிளையாட்டுநான் எல்லா வகையான கிரிக்கெட்லயும் இப்போ செம பார்ம்ல இருக்கன். யாரோட கேப்டன்சில இருந்தாலும் என்னுடைய...

நான் எல்லா வகையான கிரிக்கெட்லயும் இப்போ செம பார்ம்ல இருக்கன். யாரோட கேப்டன்சில இருந்தாலும் என்னுடைய இலக்கு இது தான் – அனல் பறக்கும் கோலியின் பேச்சு

- Advertisement-

மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியானது கடந்த 2013-ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி தொடர்களில் நன்றாக செயல்பட்டாலும் நாக்கவுட் போட்டிகளின் போது தோல்வி அடைந்து வெளியேறி வருவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாகவும், விருப்பமாகவும் இருந்து வருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்றைய கடைசி ஐந்தாவது நாளில் 280 ரன்கள் தேவையாக உள்ளது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 20 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் வெற்றி பெற்றது போன்று இங்கும் ஒரு வெற்றியை பதிவு செய்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் ஐசிசிக்கு விராட் கோலி பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அந்த நேர்காணலில் விராட் கோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏராளமான விடயங்கள் நடந்து விட்டது. எல்லா கிரிக்கெட்ருக்குமே இது போன்ற சூழல் ஏற்படும்.

- Advertisement-

அந்த வகையில் எனக்கும் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது. அதோடு தற்போது நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடிய வருவதாக உணர்கிறேன். அதோடு இந்திய அணிக்காக ஒவ்வொரு முறை நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவதை எனது பெருமையாக கருதுகிறேன்.

இதையும் படிக்கலாமே: உலக டெஸ்ட் பைனலில் உங்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பின்னால் சிஎஸ்கே-வின் தாக்கம் உள்ளதா? – ரகானே கொடுத்த பாசிட்டிவ் பதில்

தோனியின் கீழ் நான் விளையாடிய போதும் சரி, எனது கேப்டன்சியில் விளையாடியது போதும் சரி, தற்போது ரோகித் சர்மா தலைமையின் கீழ் விளையாடும்போதும் சரி ஒரு பேட்ஸ்மேனாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அது மட்டும் தான் என்னுடைய இலக்கு என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்