- Advertisement -
Homeவிளையாட்டுகப்பா மைதானத்தில்.. கோலி ஆடிய ஒரே டெஸ்ட்.. அதுல அவர் சேர்த்த ரன் எவ்ளோ தெரியுமா..

கப்பா மைதானத்தில்.. கோலி ஆடிய ஒரே டெஸ்ட்.. அதுல அவர் சேர்த்த ரன் எவ்ளோ தெரியுமா..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த போது அவர் ஃபார்முக்கு திரும்பி விட்டதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர். ஆனால் அந்த சந்தோசம் இரண்டாவது டெஸ்ட்டிலேயே சுக்கு நூறாக உடைந்து போனது. டி20 உலக கோப்பைத் தொடரில் இருந்தே சர்வதேச போட்டிகளில் ரன் சேர்க்க முடியாமல் திணறி வரும் கோலி, ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.

வங்கதேச மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் சொதப்பி இருந்த கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் அப்படித்தான் ஆடி இருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து பட்டையை கிளப்பிய கோலி, மீதம் இருக்கும் போட்டிகளிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது டெஸ்டில் அடிலைட் மைதானத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய கோலி, ஒரு இன்னிங்ஸில் கூட 20 ரன்கள் தாண்டவில்லை. கடந்த சில போட்டிகளாகவே வெளியே செல்லும் பந்தை தேவையே இல்லாமல் பேட்டை வைத்து ஸ்லிப்பில் கேட்ச் ஆவதை வழக்கமாக வைத்துள்ள கோலி, அதை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என தெரிகிறது.

இதனிடையே மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கே பேட்ஸ்மன்களுக்கு சவாலும் கூடுதலாக இருக்கும். மற்ற மைதானங்களைவிட கப்பாவில் வேகப்பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும் என்பதால் அதை எதிர்த்து இந்திய அணி ஆட வேண்டும் என்றால் இன்னும் சிறப்பாக தயாராக வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.

- Advertisement-

இதனிடையே மூன்றாவது டெஸ்ட்க்கு முன்பாக தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வரும் விராட் கோலி, பேக் பூட்டில் ஆடவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பொதுவாக பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால் பேக் பூட்டில் ஆடுவது மிக அவசியம். இதனால், ஃப்ரண்ட் பூட்டில் அபாரமாக ஆடும் கோலி, பேக் பூட்டிலும் பயிற்சி மேற்கொண்டு வருவது நல்ல அறிகுறியாகவே தெரிகிறது.

மேலும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்வதை குறைத்துக் கொண்டாலும் நல்லதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதனிடையே, இதற்கு முன்பாக ஒரே ஒரு முறை பிரிஸ்பேன் மைதானத்தில் கோலி ஆடியுள்ள சூழலில் அதில் அவர் சேர்த்த ரன் பற்றிய விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த 2014 ஆம் ஆண்டு, கப்பா மைதானத்தில் நடந்த டெஸ்டில் தான் கோலி களமிறங்கி உள்ளார்.

இதில் முறையே 19 மற்றும் 1 ரன்களில் அட்டமிழந்திருந்தார் கோலி. ஹேசல்வுட் மற்றும் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் ஆகியோர் கோலியை அவுட் செய்திருந்தனர். இப்படி ஒரே ஒருமுறை கப்பாவில் ஆடியுள்ள கோலி, மொத்தம் 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், இந்த முறை அதனை நிச்சயம் மாற்றி எழுதுவார் என்றும் தெரிகிறது.

சற்று முன்