நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 35 ஓவர்களில் 273 என்ற இலக்கை எட்டி மகத்தான வெற்றியை பெற்றது. இது இந்திய அணியின் இரண்டாவது வெற்றியாகும் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தை பொருத்தவரை டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் சுருண்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் 50 ஓவர்கள் முழுமையாக ஆடி எட்டு விக்கெட் இழந்து 272 ரன்கள் குவித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பேட்டிங் ஆட களமிறங்கிய இந்தியனுக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் சிறப்பான ஒரு துவக்கத்தை வழங்கினர். ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு பக்கபலமாக மறுபுறம் இசான் கிஷனும் இருந்தார். 84 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 131 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.
அதே போல முதல் போட்டியில் இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருக்கையில் அணியை நிமிரச் செய்த விராத் கோலி இரண்டாவது போட்டியிலும் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளை சந்தித்த அவர் இதில் 55 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் டி20 மற்றும் ஓடிஐ உலக கோப்பை ஆகிய இரண்டையும் சேர்த்து அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. மொத்தமாக 53 போட்டிகள் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 2311 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2278 ரண்களும் சங்ககாரா 2193 ரண்களும் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியின் மூலம் விராட் கோலி இந்திய மண்ணில் தனது 50ஆவது அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 58 அரை சதங்களுடன் முதலிடத்திலும், தோனி 33 அரை சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.