- Advertisement 3-
Homeவிளையாட்டுவிராட் கோலி செய்தது மிகப்பெரிய குற்றம்... ஒப்பந்தத்தை அவர் மீறி இருக்கிறார்... இதெல்லாம் அவருக்கு தெரியாதா......

விராட் கோலி செய்தது மிகப்பெரிய குற்றம்… ஒப்பந்தத்தை அவர் மீறி இருக்கிறார்… இதெல்லாம் அவருக்கு தெரியாதா… அதிரடி காட்டும் பிசிசிஐ

- Advertisement 1-

உலகில் உள்ள தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் விராட் கோலி ஒருவர் ஆவார். அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் ஜிம்மில் பல மணி நேரம் தவம் கிடக்கிறார் என்றே கூற வேண்டும். கிரிக்கெட்டையும், ஃபிட்னைஸையும் இரு கண்களாக கருதி வீரராக அவர் இருக்கிறார்.

35 வயதான விராட் கோலி நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் யோயோ சோதனையில் பங்கேற்று தேர்ச்சி அடைந்ததை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் இது பற்றி கூறுகையில் கூறுகையில்: “பயமுறுத்தும் கடினமான சவால்களைக் கொண்ட யோயோ சோதனையை பாஸ் செய்தது மிகவும் மகிழ்வாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

யோயோ வில் தேர்ச்சி பெற 16 புள்ளிகளை ஒரு வீரர் பெற வேண்டும். ஆனால் கோலியோ 17.2 புள்ளிகளை குவித்து அனைத்து வீரர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் கேப்டனாக இருந்த சமயத்தில் 19 புள்ளிகள் குவித்தது அவரது உச்சபட்ச யோயோ புள்ளிகளாகும். யோயோ பிட்னஸ் டெஸ்ட் ஆனது கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் முதன்முதலாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த யோயோ டெஸ்ட் ஆனது டானிஷ் ஃபுட்பால் உடலியல் நிபுணர் ஜென்ஸ் பங்ஸ்போ அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த டெஸ்ட் ஆரோபிக் ஃபிட்னைஸை சோதிக்கக் கூடிய ஒன்றாகும் . இருபது மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீரர்கள் கடக்க வேண்டும், இதுதான் இந்த டெஸ்டின் முக்கியமான சாரம்சமாகும்.

- Advertisement 2-

இந்திய அணி வீரர்கள் பலரும் நன்றாக பேட் செய்தாலும் ஃபில்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் விராட் கோலி இந்த டெஸ்டை அவரது கேப்டன்சி காலத்தில் கட்டாயம் ஆக்கினார். இது அந்த காலகட்டத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவர் இந்திய அணிக்கு கொண்டு வந்த இந்த தேர்வு முறை இன்னமும் தொடர்கிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு முன்னர் இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள மைதானத்தில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பயிற்சிக்கு முன் இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோயோ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பெங்கேற்ற கோலி தான் பெற்ற மதிப்பெண்ணை அனைவரும் நேரடியாக அறியும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது தவறு என பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த விவகாரம் பி.சி.சி.ஐ வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: ஒரு வீரர் யோயோ டெஸ்டில் அவர் பங்கு பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம். ஆனால் மதிப்பெண்களை நேரடியாக அவர் பதிவு செய்துள்ளது குற்றமாகும். இதை நாங்கள் வாய்வழியாக ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இது பிசிசிஐ யின் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இதனால் வீரர்கள் மதிப்பெண்கள் சார்ந்த ரகசிய விஷயங்களை பகிர்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சற்று முன்