ஒரு லெவலுக்கு மேல பேச்சே கிடையாது வெறும் வீச்சு தான் என்று ஜெயிலர் படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பேசுவது போல் தற்போது சமூக வலைத்தளத்தில் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார். இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி களத்தில் தற்போது ஃபார்முக்கு திரும்பி தடாலடி செய்து வரும் விராட் கோலி, ஓய்வு நாட்களில் கூட சும்மா இருப்பதில்லை.
அண்மைக்காலமாக விராட் கோலி குறித்து பல விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வந்தது. அதில் அவர் ஒரு பதிவை போட 11 கோடி ரூபாய் சமூக வலைத்தளத்திற்கு வாங்குவதாக பல செய்திகள் வந்தது. இதனை பொய் என்று விராட் கோலி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விராட் கோலி குறித்து பிரபல செய்தி நாளிதழ் ஒரு செய்தி போட்டிருந்தது. அதில் மகாராஷ்டிராவில் உள்ள ஆலியா பாக் என்ற இடத்தில் விராட் கோலி பண்ணை வீட்டு ஒன்றை வாங்கி இருப்பதாகவும், அதில் அதி நவீன வசதிகள் இருப்பதாகவும் செய்து வெளியிட்டுள்ளது.
மேலும் தனது ஓய்வு நாட்களில் அங்கு சென்று கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்காக ஸ்பெஷலான ஒரு ஆடுகளத்தை தயாரிக்க விராட் கோலி உள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
சுமார் ஆறு கோடி கொடுத்து இந்த பண்ணை வீட்டை விராட் கோலி வாங்கி இருப்பதாகவும் இது 2000 சதுர அடி இருப்பதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இதற்கு விராட் கோலி தற்போது தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த செய்தியை தனது ஸ்டோரி பக்கத்தில் போட்டுள்ள விராட் கோலி சிறுவயதில் இருந்து இந்த செய்தித்தாளை நான் படித்து வருகிறேன்.
ஆனால் தற்போது இவர்களும் பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். விராட் கோலியின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எப்போதும் தம்மை பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை கண்டுகொள்ளாத விராட் கோலி தற்போது ஸ்பாட்டிலே தக்க பதிலடி கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கி வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி பற்றி செய்தி போட வேண்டும் என்றால் கொஞ்சம் பார்த்து போடுங்கள் என பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள்.