Homeகிரிக்கெட்எனக்கு ஏதோ பிரச்சனைன்னு எங்க அம்மா நெனைக்கறாங்க. ஒவ்வொரு போட்டி முடிஞ்ச பிறகும் எனக்கு கால்...

எனக்கு ஏதோ பிரச்சனைன்னு எங்க அம்மா நெனைக்கறாங்க. ஒவ்வொரு போட்டி முடிஞ்ச பிறகும் எனக்கு கால் பண்ணி இதெல்லாம் விசாரிப்பாங்க – விராட் கோலி

-Advertisement-

கடவுளின் மிகசிறந்த ஒரு படைப்பு அம்மா தான் என்றால் அது மிகையாகாது. அன்னையை விட யாராலும் நம்மை நேசத்தோடும், பாசத்தோடும் கவனித்துக்கொள்ள முடியாது. உலகமே ஒருவரை எதிர்த்தாலும் அவர்களுக்கு எதிராக தன் பிள்ளைக்காக நிறக்கூடியவள் அன்னை தான். அரசனானாலும் சரி, ஆண்டி ஆனாலும் சரி, எல்லாருக்கும் சமமாக கிடைப்பது அன்னையின் பாசம் மட்டுமே.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி தனது அன்னையின் அன்பை குறித்து சமீபத்தில் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் நடந்த ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளார். தனது உடல் நலன் குறித்து தன்னுடைய அன்னை எவ்வளவு வருத்தப்படுவார் என்றும், அதே சமயம் தனது அன்னையை மகிழ்விக்க தான் செய்யும் சிறிய சிறிய விடையங்கள் தான் தன்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்றும் அவர் கூறி உள்ளார்.

-Advertisement-

அதே போல 18 வயதில் தன்னுடைய தந்தையை இழந்த பிறகு, தன்னுடைய தாய் தன்னை எவ்வளவு சிறப்பாக பார்த்துக்கொண்டார், இந்த நவீன காலத்திலும் அவர்களுக்கு இருக்கும் அக்கறையும், பிணைப்பு குறித்தும், ஒரு விளையாட்டு வீரராக தன்னுடைய உடற்பயிற்சியானது தனது அன்னையின் கண்களுக்கு எப்படி தெரிகிறது போன்ற பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

கோலி கூறுகையில், பொதுவாக என்னுடைய உடற்தகுதி பற்றி பலரும் பேசுவதுண்டு. ஆனால் என் அன்னை முற்றிலும் மாறுபட்டவள். போட்டி முடிந்த பிறகு அவர் எனக்கு கால் செய்து, ஏன் இப்படி மெலிந்து போய்ட்ட, ஒழுங்கா சப்படறது இல்லையா? என்று கேட்பார். அதே போல எனக்கு ஏதோ நோய் இருப்பதாகவும் அதனால் தான் நான் மெலிந்துள்ளேன் என்றும் அவர் நினைக்கிறார்.

-Advertisement-

கடந்த 8-9 ஆண்டுகளாக எனக்கு ஏதோ உடல்நிலை சரி இல்லை என்றும் ஆனால் நான் அதை அவரிடம் மறைக்கிறேன் என்றும் அவர் கருதுகிறார் என்று கூறியுள்ளார் கோலி. அதே போல தான் எத்தனையோ சுவாரசியமான போட்டிகளில் விளையாடினாலும், வீட்டில் இருப்பது மட்டுமே தனக்கு மிகுதியான சந்தோசத்தை கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்னையை பிடிக்காத மகன் உண்டா? அதற்க்கு கோலி மட்டும் விதி விலக்கா என்ன? இந்த உலகிற்கு அவர் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவருடைய அன்னையை பொறுத்தவரை அவர் குழந்தை தானே. இந்த பாச பிணைப்பு எப்போதும் தொடரட்டும்.

-Advertisement-

சற்று முன்