Homeகிரிக்கெட்ரசிகர்களை பார்த்து கோலி செய்த செய்கை... நொடியில் மாறிய ரசிகர்கள்.. ஆரத்தழுவி நவீன் உல் ஹக்

ரசிகர்களை பார்த்து கோலி செய்த செய்கை… நொடியில் மாறிய ரசிகர்கள்.. ஆரத்தழுவி நவீன் உல் ஹக்

-Advertisement-

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 9வது உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்த அணியின் கேப்டன் ஷாகிதி அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் வந்த இந்திய அணி வெறும் 35 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது. இதற்கு ரோகித் சர்மா அபார ஆட்டமாக காரணமாக அமைந்தது. 83 பந்துகளில் 131 ரன்கள் விளாசி ஏராளமான சாதனைகளை படைத்தார் ரோகித் சர்மா. இது உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளாசும் 7வது சதமாகும்.

-Advertisement-

ஆனால் ரோகித் சர்மாவிடன் சாதனையை விடவும் விராட் கோலி செய்த சம்பவமே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்காக ஆடிய நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நவீன் உல் ஹக் எங்கு சென்று விளையாடினாலும், அவரை பார்த்த விராட் கோலியின் பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

நேற்றைய ஆட்டத்திலும் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்த போது விராட் கோலியின் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பினர். அதன்பின் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்த போது, நவீன் உல் ஹக் பந்துவீசினார். அப்போதும் நவீன் உல் ஹக்கை சீண்ட கோலி கோஷம் எழுப்பப்பட, உடனடியாக ரசிகர்களை நோக்கி கோஷம் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

-Advertisement-

இதன்பின் விராட் கோலியின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் அமைதி காத்தனர். இதையடுத்து நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி இருவரும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டு ஆரத்தழுவி நட்பு பாராட்டினர். கடந்த 6 மாதங்களாக சமூக வலைதளங்காளில் நடந்து வந்த யுத்தத்தை விராட் கோலி சாதாரணமாக முடித்து வைத்துவிட்டார்.

அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதேபோல் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்