- Advertisement -
Homeவிளையாட்டு6.5 அடி உயர பந்து வீச்சாளரையே எதிர்கொள்ள முடியாமல் திணறும் கோலி.. கடும் நெருக்கடியில் நட்சத்திர...

6.5 அடி உயர பந்து வீச்சாளரையே எதிர்கொள்ள முடியாமல் திணறும் கோலி.. கடும் நெருக்கடியில் நட்சத்திர வீரர்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த சூழலில் அடுத்த நான்கு மாதங்களுக்கு தொடர்ச்சியாக பல முக்கியமான கிரிக்கெட் தொடர்களையும் அவர்கள் ஆடவுள்ளனர். வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பல சவால் நிறைந்த தொடர்களும் இந்திய அணிக்கு சிறிய இடைவெளிக்கு மத்தியில் வர உள்ளதால், இதில் இந்திய அணி வெற்றிகளை குவித்து ஐசிசி அரங்கில் மீண்டும் சாதனைகளை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்திய அணி இன்னும் இரண்டு தினங்களில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தொடர்ந்து டி20 தொடரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்க வேண்டுமென்றால் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு testi போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே வேளையில் வங்கதேச அணியையும் நாம் எளிதில் எடை போட்டு விட முடியாது. சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று சரித்திரம் படைத்திருந்தது. பாகிஸ்தான் அணியிலும் இந்தியாவைப் போல தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை அசத்தலாக எதிர்கொண்டிருந்த வங்கதேச அணி நிச்சயம் இந்திய அணிக்கும் ஒருவேளை குடைச்சல் கொடுக்கலாம்.

இது தொடர்பாக பல வங்கதேச வீரர்களும் நிச்சயம் இந்திய மண்ணிலும் சாதிப்போம் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சொந்த மண்ணில் யாரும் அசைத்து கூட பார்க்க முடியாத இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி நிச்சயம் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு தான் அதிகம் உள்ளது என்றும் பல கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தற்போது வெளியான தகவல் ஒன்று இந்திய ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement-

டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி தவிர மற்ற போட்டிகளில் ஜொலிக்காத கோலி, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் ரன் சேர்க்க திணறி இருந்தார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் நம்பி வரும் சூழலில் தான் பயிற்சியில் சற்று திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பும்ராவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விராட் கோலி பயிற்சியில் அவுட்டாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பும்ரா மட்டுமில்லாமல் வலைப்பந்து வீச்சாளராக இருக்கும் குர்நூர் சிங்கின் பவுன்சர் பந்தையும் விராட் கோலி எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெட் பந்து வீச்சாளர்கள் பந்திலேயே திணறும் கோலி, வங்கதேச அணியில் தற்போது சில தரமான பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் நிச்சயம் தனது பேட்டிங்கில் உள்ள பிழைகளை சரி செய்து களமிறங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்