ஒவ்வொரு ரன் அடிக்கும்போது இதை தான் நினைத்தேன்… என்னுடைய 15 வருட சர்வீஸ்ல இந்த மாதிரி இது தான் முதல் முறை – விராட் கோலி பேச்சு

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் இந்திய அணி மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை எதிரணிக்கு கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணியோ 32 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி

எப்பொழுதும் அணிக்கு பயன்படும் வகையில் தான் நான் என்னுடைய விளையாட்டை விளையாடுவேன். இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரு சிறப்பான துவக்கம் இருந்தது. அதே சமயம் நானும் கே.எல் ராகுலும் களத்திற்கு வந்தபோது ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அதனால் நான் ரொட்டேட் செய்து அவருக்கு பேட்டிங் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று விளையாடி வந்தேன்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நான் 45 ரன்கள் அடித்திருப்பது எனக்கே தெரியவில்லை. காரணம் நான் பெரிதாக எந்த சாட்டையும் விளையாடாமல் ரொட்டேட் மட்டுமே செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் எந்த பந்தை அடித்த ஆடவேண்டுமோ அந்த பந்தயெல்லாம் அடித்து ஆட தொடங்கினேன். என்னுடைய உடல் தகுதிக்கு பின்பு நிறைய உழைப்பு உள்ளது. இந்த உடல் தகுதி தான் என்னுடைய ஆட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

பெரிய ஷாட்களை அடிப்பதற்கு பதிலாக இரண்டு ரன்கள் ஓடி எடுப்பது என்பது மிகவும் எளிதானது. அது பல நேரங்களில் எனக்கு கை கொடுத்துள்ளது. இதே முறையை தான் நான் தொடரவே விரும்புகிறேன். நானும் கே.எல் ராகுலும் சிறப்பான ஷாட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து விளையாடினோம். மற்ற நேரங்களில் ரன்களை ஓடியே எடுத்தோம். இதன் காரணமாக பௌலர்களுக்கு எங்களை அவுட்டாக்குவது என்பது கடினமான காரியமாக மாறியது.

- Advertisement -

பார்ட்னர்ஷிப் பற்றி நாங்கள் பெரிதாக எண்ணவில்லை. ஒரு கட்டத்தில் பார்ட்னர்ஷிப் உருவான பிறகு தொடர்ந்து பேட்டிங் செய்வோம் பேட்டிங் செய்வோம் என்று நாங்கள் கூறிக் கொண்டோம். இது ஒரு மறக்க முடியாத பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த உடனே கே.எல் ராகுல் இந்த மாதிரி ஃபார்மில் இருப்பது எங்கள் அணிக்கு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வலு சேர்க்கும்.

நான் ஒவ்வொரு முறை ரன் அடிக்கும் போதும் என் மனதில், அடுத்த நாள் மீண்டும் மூன்று மணிக்கு விளையாட வேண்டுமே என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் (இலங்கைக்கு எதிரான போட்டியில்). என்னுடைய 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. ஆனால் இதுவும் ஒரு சேலஞ்ச் தான்.

அதிர்ஷ்டவசமாக நாங்கள் டெஸ்ட் பிளேயர்களாக உள்ளோம். நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளோம். அதனால் அடுத்த நாள் எப்படி மீண்டும் திரும்பி வந்து விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எனக்கு 35 வயது ஆகிறது எனினும் நான் இதுபோன்ற சூழலில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நாளை விளையாட வேண்டும். எனது சார்பாக கிரௌண்ட்ஸ் மேன்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்