- Advertisement 3-
Homeவிளையாட்டுவிராட் கோலிக்கு இந்த பிரச்சனை வேற இருக்கா.. கொத்தா மாட்ட போகும் இந்திய அணி.. வேட்டையாட...

விராட் கோலிக்கு இந்த பிரச்சனை வேற இருக்கா.. கொத்தா மாட்ட போகும் இந்திய அணி.. வேட்டையாட போகும் நியூசிலாந்து பவுலர்.. மும்பை நடக்கப்போகும் சீன்

- Advertisement-

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2 சதங்கள், 3 அரைசதங்கள் என்று 594 ரன்களை விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார் விராட் கோலி.

இந்த நிலையில் நவ.15ஆம் தேதி மும்பையில் நடக்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி என்று நியூசிலாந்து அணியிடம் இந்திய கொடூர தோல்விகளை அடைந்துள்ளது.

- Advertisements -

இதனால் நியூசிலாந்து அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது. ஆனால் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ரோகித் சர்மா ஆட்டமிழந்தால் விராட் கோலி களத்தில் சிறப்பாக ஆடுவதால் ரசிகர்களிடையே ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலிக்கு நாக் அவுட் போட்டியென்றாலே அலர்ஜி என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை விராட் கோலி 3 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். அந்த 3 அரையிறுதி போட்டிகளிலும் விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement-

2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் எடுத்து வாகப் ரியாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிட்செல் ஜான்சன் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் விராட் கோலி. அதேபோல் 2019ஆம் ஆண்டு இடதுகை வேகப்பந்துவீச்சாளரான போல்ட் பந்தில் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார்.

தற்போது மீண்டும் போல்ட் நியூசிலாந்து அணியில் இருப்பதால், விராட் கோலி இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரையிறுதி போட்டியில் விராட் கோலி மீதான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்