- Advertisement -

வேண்டாம் என மறுத்த ரோஹித்.. விடாப்பிடியாக சம்மதிக்க வைத்த கோலி.. அந்த ஒரு ஃபோட்டோ பின்னாடி இப்படி ஒரு எமோஷனலா..

இந்திய அணி டி20 உலக கோப்பையை சமீபத்தில் கைப்பற்றி இருக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அந்த அணியின் பெருமையான தருணத்தில் இருந்ததே பலரையும் மனம் உருக வைத்திருந்தது. இந்த இரண்டு பேருமே பல ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாக தயார் செய்த போதிலும் அவர்களால் ஐசிசி கோப்பையை மட்டும் சொந்தம் கொண்டாடவே முடியாமல் போனது.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தார். இதே போல, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது கோலியும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் முன்னணி வீரர்களாக உயர்ந்து தங்கள் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்த பின்னர் ஏனோ உலக கோப்பையை தொட்டு பார்க்கவே முடியவில்லை.

- Advertisement -

பல நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் இந்த வடு மாறாமல் இருக்க, விரைவில் விடிவு காலம் கிடைக்கும் என்பதும் பலரின் நம்பிக்கையாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு தோல்வி, 2023 ஆம் ஆண்டு இரண்டு முறை தோல்வி என சில ஐசிசி தொடர்களின் காயத்திற்கு 2024 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை சிறப்பான மருந்தாக அமைந்துள்ளது.

ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை தவிடு பொடியாக்கி நிச்சயம் டி20 உலக கோப்பையை சொந்தமாக்குவார்கள் என தொடர் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட இதனை கணித்து வந்தனர்.

- Advertisement -

அதனை நிஜமாக்கும் வகையில், இந்திய அணி 13 ஆண்டுகள் கழித்து ஒரு உலக கோப்பையை வென்றிருந்தது சிறந்த தருணமாக கிரிக்கெட் அரங்கில் அமைந்திருந்தது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் தருணமாகவும் இருக்கும் என தெரிகிறது.

இதனிடையே, டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இணைந்து உலக கோப்பையுடன் தனியாக புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தனர். அந்த சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி கோலி தெரிவித்த கருத்து பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

“அது ரோஹித்திற்கும் ஒரு ஸ்பெஷலான தருணமே இருந்தது. அவரது குடும்பத்தினர் இங்கே இருந்தார்கள். இதனால் அவரிடமும் நான் கொஞ்ச நேரம் கோப்பையை பிடித்து கொள்ளும்படி கூறினேன். மேலும் அவர் கோப்பையை பிடித்து கொள்ள நாங்கள் இருவரும் இணைந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஏனென்றால் எங்களின் இந்த பயணம் மிக நீண்டது” என கோலி தெரிவித்தார்.

- Advertisement -