- Advertisement -
Homeவிளையாட்டுபாக்கிஸ்தான் பவுலர் யார் வேணுனாலும் வரட்டும்... நம்ப கிட்ட இதுக்காகவே ஒருத்தர் இருக்காரு.. அவர் பாத்துப்பாரு.....

பாக்கிஸ்தான் பவுலர் யார் வேணுனாலும் வரட்டும்… நம்ப கிட்ட இதுக்காகவே ஒருத்தர் இருக்காரு.. அவர் பாத்துப்பாரு.. முகமது கைப் பேச்சு

- Advertisement-

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. முல்தானில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்.2ம் தேதி பாலக்கேலவில் நடைபெறவுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகள் மோதவுள்ளதால் இப்போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபக்கம் ஷாஹீன்ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் என பலம் வாய்ந்த பாகிஸ்தான் பந்துவீச்சை, இந்திய அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இது ஒருபக்கம் இருந்தாலும், கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்ற அதீத நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் தடுமாறினாலும், கோலி தனிஒரு வீரராக 82 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்ததே அதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி சிறப்பாக விளையாடினார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது கோலி சிறந்த பேட்டராக உள்ளார். அவர் மொத்த பொறுப்பையும் எடுத்துகொள்வார். அவர் நல்ல சேஸ் மாஸ்டரும் கூட. அப்போட்டியில் அந்த அளவிற்கு அவர் நல்ல ஃபார்மில் இருந்ததற்கு முக்கிய காரணம், கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தான்.

- Advertisement-

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்டதால், ஷாஹீன்ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் என ஒவ்வொரு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மிகவும் அபாயகரமான வீரரான இருப்பார் என்றார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிப்பீர்கள், அதற்கு ஏதாவது வியூகம் வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, அவர்களை கோலி பார்த்துகொள்வார் என தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 உலககோப்பைக்கு பிறகு பாகிஸ்தானின் ஷாஹீன்ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி ஆகியோரது பவுலிங்கில் கோலி 110 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் 158 ரன்களை விளாசி ஒரேமுறை மட்டுமே அவர் ஆட்டமிழந்தார் என்பது கவனக்கத்தக்கது. 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் கோலி தனது அதிக ஸ்கோரான 183 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்