- Advertisement 3-
Homeவிளையாட்டுவெட்கப்படணும்.. நீங்க என்ன கில்க்றிஸ்டா.. ரிட்டயர்டு ஆகுறது நல்லது.. வங்காளதேச வீரரை கிழித்து தொங்கவிட்ட சேவாக்..

வெட்கப்படணும்.. நீங்க என்ன கில்க்றிஸ்டா.. ரிட்டயர்டு ஆகுறது நல்லது.. வங்காளதேச வீரரை கிழித்து தொங்கவிட்ட சேவாக்..

- Advertisement-

பிரபல பங்களாதேஷ் வீரர் ஒருவரை குறித்து சேவாக் தெரிவித்த கருத்து தற்போது அதிக பரபரப்பை கிரிக்கெட் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. நடப்பு டி20 உலக கோப்பை தொடர் நிச்சயம் பலருக்கும் புரியாத புதிராகவும், மிகப்பெரிய மர்மமாகவும் தான் இருந்து வருகிறது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடிப்பது தான் ஸ்டைலாக இருக்கும் சூழலில் தற்போது பல போட்டிகள் உலக கோப்பைத் தொடரில் நடந்து முடிந்தாலும் 150 ரன்களை கூட நிறைய அணிகள் தாண்டவில்லை.

100 முதல் 120 ரன்கள் வரையே சிறந்த இலக்காக இருக்கும் சூழலில் அதனை எட்டிப் பிடிப்பது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கடினமாகவும் உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த பல போட்டிகளை கூறிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 113 ரன்கள் தான் எடுத்திருந்தது.

- Advertisements -

ஆனால் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும் அதனை தவறவிட்டு நான்கு ரன்களில் கோட்டை விட்டிருந்தது. டி20 உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோரை வெற்றியாக மாற்றிய பெருமையையும் தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ள நிலையில் டிஆர்எஸ் மூலம் நான்கு ரன்கள் வங்காளதேச அணிக்கு சேர்க்காமல் போனதும் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

கடைசி கட்டத்தில் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய போதிலும் அவர்களால் வெற்றியாக அதனை மாற்ற முடியாமல் போனது. இதனிடையே இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரமான ஷகிப் அல் ஹசன் ஆடிய விதம் குறித்து இந்தியாவின் முன்னாள் சேவாக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி இருந்த ஷகிப் அல் ஹசன் ஆறு ரன்கள் கொடுத்திருந்தார். பேட்டிங்கிலும் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தார். இது பற்றி பேசிய சேவாக், “கடந்த உலக கோப்பையை பார்த்ததும் ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் ஆடமாட்டார் என்று நினைத்தேன். உங்களது ஓய்வுக்கான நேரம் எப்போதோ வந்துவிட்டது. அணியின் அனுபவ வீரராக இருந்தும் சமீபத்திய ஆட்டத்தை நினைத்து நீங்கள் வெட்கப்பட வேண்டும். நீங்களாகவே முன் வந்து டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும்.

உங்கள் அனுபவத்திற்காக அணியில் நீங்கள் தேர்வாகி இருந்தால் அந்த மதிப்பை நீங்கள் போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் கொஞ்ச நேரம் பேட்டிங்காவது செய்து கிரீஸில் இருக்க வேண்டும். நீங்கள் ஆடம் கில்க்றிஸ்டோ, மேத்யூ ஹைடனோ கிடையாது. ஹூக் மற்றும் புல் ஷாட் அடிக்க முடியவில்லை என்றால் உங்கள் பலம் அறிந்து ஷாட்களை அடியுங்கள். நீங்கள் வங்காளதேச வீரர் என்பதால் அதற்கேற்ற வகையில் ஆடுங்கள்” என கடுமையாக சாடி உள்ளார் சேவாக்.

சற்று முன்