- Advertisement -
Homeவிளையாட்டுIPL: 2023 இவரு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறாரு? தோனி ஓய்வு குறித்து சேவாக் சொன்ன...

IPL: 2023 இவரு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறாரு? தோனி ஓய்வு குறித்து சேவாக் சொன்ன கருத்து!

- Advertisement-

கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் ஓய்வு குறித்து பேச்சுகள் எழுந்து வருகின்றன. அப்போதெல்லாம் தோனி சென்னை ரசிகர்களுக்கு முறையாக நன்றி செலுத்தாமல் ஓய்வு பெற மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது 41 வயதாகும் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு குறித்து தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக தெரிவித்தார். போட்டியின் போது தோனி டாஸ் வென்றபோது காது வலிக்கும் அளவுக்கு சத்தத்தை ரசிகர்கள் எழுப்பினர்.

டாஸ் நிகழ்வை தொகுத்து செய்த டேனி மோரிசன், தோனியிடம் ”உங்களின் கடைசி ஐபிஎல் தொடரை விளையாடுவது எப்படி உள்ளது” எனக் கேட்க, அதற்கு சிரித்துக் கொண்டே தோனி “ஓ நீங்களாகவே முடிவு செய்து விட்டீர்கள் இதுதான் என்னுடைய கடைசி சீசன் என்று.” எனக் கூற மைதானம் ஆர்ப்பரித்தது. அதனால் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற மாட்டார் என ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு சேவாக் கோபமான கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “எனக்கு புரியவில்லை; ஏன் அவர்கள் இதையேக் கேட்கிறார்கள்? அது அவருடைய கடைசி வருடமாக இருந்தாலும், நீங்கள் ஏன் அவரிடம் கேட்க வேண்டும்? அது அவருடைய முடிவு; அவரே அதை கூறட்டும்! ஒருவேளை அவர், தோனியிடம் இருந்து அவர் வாயாலேயே அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டு இருக்கலாம். இது உண்மையில் அவரது கடைசி வருடமா இல்லையா என்பது MS தோனிக்கு மட்டுமே தெரியும்’ என்று சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

- Advertisement-

சேவாக் கிரிக்கெட் சம்மந்தமான எந்த கேள்விகளுக்கும் தயங்காமல் தன்னுடைய ஸ்டைலில் தடாலடியான பதிலைக் கூறுவதில் வல்லவர் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே.

சற்று முன்