- Advertisement -
Homeவிளையாட்டுஉன்கிட்ட இருக்க பணத்த விட என்னோட தலைல இருக்க முடி அதிகமா இருக்கு - சொயிப்...

உன்கிட்ட இருக்க பணத்த விட என்னோட தலைல இருக்க முடி அதிகமா இருக்கு – சொயிப் அக்தருக்கு வீரேந்திர சேவாக் கொடுத்த பதிலடி

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் கடந்த 1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 2013 வரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடி அவர் 104 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி துவக்க வீரராக இன்றளவும் போற்றப்படும் அவர் கிரிக்கெட் தொடர்பான பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் கூறிய கருத்திற்கு அளித்துள்ள ஒரு பதிலானது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுயது குறித்தும், சோயிப் அக்தர் உடனான நட்பு குறித்தும் பேசியுள்ள சேவாக் கூறுகையில் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2003-2004 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருநாட்டு தொடர்களிலும் மாறி மாறி விளையாடி வந்தன. நாங்கள் மூன்று முறை பாகிஸ்தான் சென்றுள்ளோம். அவர்களும் இங்கு இருமுறை வந்து விளையாடி உள்ளனர்.

அப்படி நிறைய தொடர்களில் நாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுக்கு இடையேயான நட்பும் சிறப்பாக இருந்தது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியில் சோயிப் அக்தர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் மாறினார்.

- Advertisement-

களத்தில் நானும் சொயிப் அக்தரும் எங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று மோதி கொண்டாலும் வெளியில் நல்ல நட்புடனே இருப்போம் என்று சேவாக் கூறியிருந்தார். அதோடு ஏற்கனவே சோயிப் அக்தர் அளித்த பேட்டி ஒன்றில் : சேவாக் உங்கள் தலையில் இருக்கும் முடியை விட என்னுடைய பணம் அதிகம் என்று கிண்டல் செய்திருந்தார். இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்தாலும் அதன் பிறகு அவ்வப்போது சேவாக்கிடம் அந்த கருத்திற்கு பதில் கேட்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்கலாமே: ஹோட்டலை தாண்டி தோனியால் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிட்சும் இப்படி தான் இருந்தது. எல்லாம் தோனியால் தான் – டெவோன் கான்வே பேச்சு

இந்நிலையில் சோயிப் அக்தரின் அந்த கருத்திற்கு தற்போது பதிலளித்துள்ள சேவாக் கூறுகையில் : சோயிப் அக்தர் அப்பொழுது அவரிடம் இருந்த பணத்தின் எண்ணிக்கை என்னுடைய முடியை விட அதிகமாக இருப்பதாக கூறியிருந்தார். தற்போது என்னுடைய தலையில் இருக்கும் முடி அவருடைய பணத்தை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி அந்த கருத்திற்கு பதில் அளித்திருந்தார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்