- Advertisement 3-
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை சமயத்தில் தோனிக்கு இப்படி ஒரு மூடநம்பிக்கை இருந்தது. எட்டாவது படிக்கும்போதே இதை நான் பார்த்தேன்...

உலகக்கோப்பை சமயத்தில் தோனிக்கு இப்படி ஒரு மூடநம்பிக்கை இருந்தது. எட்டாவது படிக்கும்போதே இதை நான் பார்த்தேன் – சேவாக் பேச்சு

- Advertisement-

வரவிருக்கும் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த உலகக் கோப்பையின் வின்னர் மற்றும் ரன்னர் அணிகளான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே பரபரப்பான மோதலுடன் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் நாடான இந்தியா, ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தன்னுடைய உலகக் கோப்பை அனுபவங்களை பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பற்றி பேசிய அவர் “நான் எட்டாம் வகுப்பில் அந்த உலகக் கோப்பையைப் பார்த்தேன், உலகக் கோப்பையில் விளையாடி எனது தேசத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன்” என்று சேவாக் கூறினார்.

- Advertisements -

மேலும் தான் விளையாடிய உலகக் கோப்பை போட்டிகள் குறித்து அவர் பேசுகையில் “நான் மூன்று உலகக் கோப்பை தொடர்களில் விளையாடினேன், அதில் ஒரு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம். ஒரு இறுதிப் போட்டியில் வென்றோம். மற்றொன்றில், நாங்கள் இரண்டாவது சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இது ஒரு பரமபத விளையாட்டு பயணம்,” எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் வீரேந்திர சேவாக், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதும் அணிக் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அசாதாரண உணவுப் பழக்கத்தைப் பற்றி பகிர்ந்த தகவல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

- Advertisement-

அது பற்றி சேவாக் கூறுகையில் “நாங்கள் எங்கு சென்றாலும் உலகக் கோப்பையை நடத்தும் நாடு எப்போதும் உலகக் கோப்பையை வென்றதில்லை என்று மக்கள் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் மூடநம்பிக்கைகள் இருந்தன. தோனி 2011 உலகக் கோப்பை முழுவதும் கிச்சடியை மட்டுமே சாப்பிட்டு அதை ராசியானது என நினைத்தார். கிச்சடி சாப்பிடுவதன் மூலம் அவர் ரன்கள் எடுக்காவிட்டாலும், அணி வெற்றிபெறும் என்று அவர் நம்பினார்.” எனக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இதுபோல சிறிய மூட நம்பிக்கைகள் இருப்பது வழக்கம்தான். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன்கள் அடித்த போட்டியில் பெவிலியனில் இருந்த இந்திய அணி வீரர்கள் தங்கள் இடத்தில் இருந்து கபில்தேவ் அவுட் ஆகும் வரை அசையாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்