உலகக்கோப்பை தொடரானது தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்தத் தொடரில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள போட்டியானது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் உற்று நோக்க செய்யும்.
ஏற்கனவே ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை படுதோல்வி அடைய செய்ததன் மூலம் இந்தியா தனது பலத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதே வேலையில் பாகிஸ்தான் அணியும் தற்போது பலம் பொருந்திய அணியாக உள்ள நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டியானது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 1992, 1996, 1999, 2003, 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியே கண்டதில்லை.
அந்த வகையில் எதிர்வரும் அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டி தற்போதே அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விரேந்திர சேவாக் இந்தியா பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற விருக்கும் போட்டி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இந்திய அணியே பாகிஸ்தானை வென்று எட்டுக்கு பூஜியம் (8-0) என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். பாபர் அசாம் தலைமையிலான அணி தற்போது சிறப்பாக இருந்தாலும் இதற்க்கு முன்புவரை உலக கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியதே கிடையாது.
அதே போல தற்போதும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 8-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும். நரேந்திர மூடி மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மோர்மட்ட ரசிகர்கள் அமர்ந்து இந்திய அணியை உற்சாகப்படுத்துவர். ஆகையால் ஆசிய கோப்பையில் வீழ்த்தியது போல இதிலும் நடக்க வேண்டும் என்று சேவக் கூறி உள்ளார்.