- Advertisement -
Homeவிளையாட்டுபுதிய இந்திய அணிக்கு பயிற்சியாளர் மாற்றம். அதிரடியாக பயிற்சியாளராக களம் இறங்க உள்ள முன்னாள் இந்திய...

புதிய இந்திய அணிக்கு பயிற்சியாளர் மாற்றம். அதிரடியாக பயிற்சியாளராக களம் இறங்க உள்ள முன்னாள் இந்திய வீரர்.

- Advertisement-

இந்திய அணி சமீப காலங்களில் பல்வேறு அணிகளாக உள்ளுக்குள்ளேயே பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அதிகப்படியான வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டும் என்பது ஒரு காரணமாகவும் அடுத்தடுத்த போட்டிகள் தொடர்ச்சியாக வருவதால் வீரர்களுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தற்போது இதுபோன்ற அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டி20 ஓடியை என இரு அணிகள் விளையாடினர். அதேபோல் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் பங்கு பெற்றனர். அதில் பும்ரா அந்த அணிக்கு தலைமையேற்று இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. அதேசமயம் கூடிய விரைவில் ஏசியன் கேம்ஸ் நடைபெற உள்ளது. அதில்ஆசிய கோப்பைக்காண அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் யாரும் ஏசியன் கேம்ஸ் அணியில் இடம் பெறவில்லை. இந்த ஏசியன் கேம்ஸ் அணிக்கு ருத்ராட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .இளம் வீரர்கள் பலரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆசியன் கேம்ஸ் போட்டிகள் ஆனது சீனாவின் ஹங்சௌவ் நகரில் செப்டம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பலரும் எதிர்பார்த்த ரிங்கு சிங்க் இடம் பெறுகிறார். மஹாராஷ்ரா அணிக்கு என்கனவே ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டுள்ளதால் அவர் இந்த தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

- Advertisement-

இந்த ஏசியன் கேம்ஸ்ல் நிச்சயம் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ப்போம் என்று ருதுராஜ் ஏற்கனவே கூறி இருந்தார். அதே போல ரசிகர்களின் ஆதரவு இந்த புதிய அணிக்கு நிச்சயம் தேவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த தொடருக்கு யார் பயிற்சியாளராக இருக்கப்போகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் அணிக்கு இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் ராஜ் பகதுலே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், முனீஸ் பாலி பீல்டிங் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகிப்பர். அணியின் புதிது அதற்கான பயிற்சியாளர்களுக்கு புதிது என்றாலும் நிச்சயம் இதில் இந்திய அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்