இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றாலே அதை உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கும். அதே சமயம் எப்போது இந்த போட்டு நடந்தாலும் வீரர்களுக்கு அதிகப்படியான ஒரு அழுத்தம் இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் பெரும்பாலும் வீரர்கள், எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றே மீடியாக்களில் கூறுவதுண்டு. இந்த நிலையில் முன்னால் பாகிஸ்தான் வீரரான வஹாப் ரியாஸ் இது குறித்து பேசுவையில்
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் மற்ற போட்டிகளை போன்ற ஒரு சாதாரண போட்டிதான் என்று எந்த ஒரு வீரர் கூறினாலும் அதை பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் வீரர்கள் தங்கள் மேல் வரும் அழுத்தத்தை திசை திருப்பவும் தாங்கள் எந்த ஒரு அழுத்தத்திலும் இல்லை என்பதை வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே அது போன்று கூறுவது உண்டு. ஆனால் உண்மையில் வீரர்களுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பதே உண்மை.
2011 ஆம் ஆண்டு செமி பைனலை என்னால் மறக்கவே முடியாது. அதுதான் இந்திய அணிக்கு எதிரான என்னுடைய முதல் போட்டி. அதில் பல விக்கட்டுகளை எப்படி எல்லாம் வீழ்த்தலாம் என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் பரபரப்பு என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும் என்று அவர் கூறியிருந்தார்.
அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி எவ்வாறு பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர் தனது கருத்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
நானாக இருந்தால் இந்திய அணியில் ஐந்து சிறப்பான பவுலர்களை ஆட வைப்பேன். ஒவ்வொரு பௌலரும் கண்டிப்பாக பத்து ஓவர்கள் வீசும் வகையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வேன். அதேபோன்று ஒரு நாள் போட்டிகளில் நிச்சயம் ஆறாவது பவுலிங் ஆப்ஷன் என்பது இருக்க வேண்டும். அதோடு விக்கெட் எடுப்பதும் முக்கியமான ஒன்று. அதனால் நான் பும்ரா, ஷமி, சிராஜ், ஜடேஜா போன்ற வீரர்களை அணியில் வைத்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கண்டி பிட்ச் குறித்து அவர் கூறுகையில், கண்டி பிட்ச்சில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது நிச்சயம் பேட்டிங் ஆடுவதற்கு சிறந்த பிட்சாக இருக்கும். நான் இலங்கை பிரீமியர் லீகில் கடந்த வருடம் விளையாடி இருக்கிறேன். அதை வைத்துப் பார்க்கையில் அங்கு டீயூ சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதனால் எந்த அணி இரண்டாவது பேட்டிங் செய்கிறதோ அவர்களுக்கு ஜெயிப்பதற்கான கூடுதல் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.