- Advertisement -
Homeவிளையாட்டுஇதுக்கு வாஷிங்டன் சுந்தர் ஆடாமயே இருந்திருக்கலாம்.. சூர்யகுமார், கம்பீர் எடுத்த முடிவால் உடைந்து போன ரசிகர்கள்..

இதுக்கு வாஷிங்டன் சுந்தர் ஆடாமயே இருந்திருக்கலாம்.. சூர்யகுமார், கம்பீர் எடுத்த முடிவால் உடைந்து போன ரசிகர்கள்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை அசத்தலாக கைப்பற்றி இருந்தது. அதே வேகத்தில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை இன்னும் ஒரு சில தினங்களில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் சந்திக்க உள்ளது. நியூசிலாந்து தொடர் ஆரம்பமானாலும் கூட அடுத்த சில தினங்களுக்கு வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு பற்றி தான் பேசுபொருளாக இருக்கும் என தெரிகிறது.

இதற்கு காரணம் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் காட்டிய தாக்குதல் ஆட்டம் தான். ங்கதேச அணி என்றாலும் கூட அவர்களுக்கு எதிராக பேட்டிங்கில் அதிரடியை மட்டுமே வெளிப்படுத்த இந்திய அணி 2 போட்டிகளில் 200 ரன்களை கடந்திருந்தது. மூன்றாவது டி20 போட்டியில் 297 ரன்கள் அடித்ததன் மூலம் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் அவர்கள் பதிவு செய்திருந்தர்.

- Advertisement -

இப்படி பல சாதனைகளை இந்த தொடரில் இந்திய அணி செய்திருந்த நிலையில் இரண்டு இளம் வீரர்கள் முதல் முறையாக சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்திருந்தனர். மயங்க் யாதவ் பவுலிங்கில் பட்டையை கிளப்ப, பேட்டிங்கில் நிதிஷ் குமார் ரெட்டி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதே போல ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் அதே வேளையில் இந்த டி20 தொடரில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சிறந்த முறையில் பயன்படுத்தாதது பற்றி விமர்சனங்கள் அதிகமாக உருவாகி உள்ளது. முதல் டி20 போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர், அடுத்த இரண்டு வர்களை வீசவே இல்லை.

- Advertisement-

இதே போல இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியிலும் ஒரு ஓவர் வீசி இருந்த வாஷிங்டன் சுந்தர், மீதி இருக்கும் ஓவரை வீசாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. சிறந்த இளம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் முறையாக பயன்படுத்தப்படவில்லை. நான்கு ஓர்கள் வீசி பேட்டிங்கிலும் நன்கு ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தர் இந்த ஆண்டு நடந்த தொடரில் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

அப்படி இருந்தும் மூன்று போட்டிகளில் களமிறங்கிய வர், நான்கு ஓவர்கள் மட்டும் வீசுவதற்காகவா அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பந்து வீச்சு ரொட்டேஷன், அனைத்து பேட்ஸ்மேன்களும் பவுலராக மாறுவது உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் இருந்தாலும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒருவரை பயன்படுத்தாமல் இருப்பது நிச்சயம் பெரிய தவறு தான் என ரசிகர்கள் கடுமையாக விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்