- Advertisement -
Homeவிளையாட்டுஅப்ப தோத்துருவோம்னு பயம் வந்துச்சு... ஆனாலும் இத பண்ணி ஜெயிச்சோம்.. ரகசியம் உடைத்த சுந்தர்..

அப்ப தோத்துருவோம்னு பயம் வந்துச்சு… ஆனாலும் இத பண்ணி ஜெயிச்சோம்.. ரகசியம் உடைத்த சுந்தர்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் சமீப காலமாக பட்டையக் கிளப்பி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் இருந்து வருகிறது. இதில் ஏராளமான இளம் வீரர்கள் ஆடி வருவதுடன் மட்டுமில்லாமல் அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் சர்வதேச வீரர்களுக்கு மத்தியில் தங்களது தாக்கத்தையும் பெரிதாக உருவாக்கும் இளம் வீரர்கள் அப்படியே சர்வதேச அணியிலும் இடம் பிடித்து அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடிவரும் டி20 தொடரிலும் கூட இளம் வீரர்களுக்கான வாய்ப்பு தான் அதிகம் கிடைத்துள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் பின்னர் அதை சுதாரித்துக் கொண்டு கம்பேக் கொடுத்திருந்த இந்திய அணி மிகச் சிறப்பாக ஜிம்பாப்வேவை எதிர்த்து ஆடி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என எதிலுமே குறைகள் இல்லாமல் சிறப்பாக ஆடி வரும் இந்திய அணி, மூன்று போட்டிகளில் ஆடி முடித்து இரண்டில் வெற்றி பெற்று பட்டையை கிளப்பி உள்ளது.

மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே பேட்டிங் செய்த போது ஆரம்பத்தில் இந்திய அணி அவர்கள் விக்கெட்டுகளை எடுத்தாலும் ஒரு கட்டத்தில் டியான் மயர்ஸ் மற்றும் கிளைட் அடண்டே ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

- Advertisement-

இதனால் அவர்கள் இரண்டு பேரும் மெல்ல மெல்ல ரன்னை உயர்த்த இந்திய அணியின் வெற்றிக்கும் ஆபத்து உருவாகியதாக தெரிந்தது. இருந்தும் முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுத்ததால் இந்தியாவின் வெற்றி கடைசி கட்டத்தில் எளிதாக இருந்தது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

ஜடேஜா டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளதால் அந்த இடத்தில் மிக பொருத்தமான சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் கலக்கி வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருது வென்றிருந்த வாஷிங்டன் சுந்தர் அதற்குப் பின் பேசுகையில், “இந்திய அணிக்காக ஆடும்போது எப்போதும் அற்புதமாக இருக்கும். தற்போதும் அப்படி தான் இருக்கிறது. பிட்ச்சை பொறுத்த வரையில் முதல் இரண்டு போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு தான் அதிக வாய்ப்பு இருந்தது.

ஆனால் இந்த முறை எங்களின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி இருந்தனர். ஜிம்பாப்வே வீரர்கள் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்ததும் எங்கள் மீது நெருக்கடி உருவானது. ஆனாலும் நாங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றோம். அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் நாங்கள் கைப்பற்றுவோம் என நம்புகிறோம்” என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

சற்று முன்