- Advertisement -
Homeவிளையாட்டுஇவர் தான்பா இந்த காலத்து சச்சின். இவரோட விக்கெட் எடுக்கறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்லை -...

இவர் தான்பா இந்த காலத்து சச்சின். இவரோட விக்கெட் எடுக்கறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்லை – இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்

- Advertisement-

இந்திய அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் தற்போது தங்களது கரியரின் கடைசி காலகட்டத்தில் இருப்பதினால் இளம் வீரர்களை தேர்வு செய்து அடுத்த கட்ட இந்திய அணியை உருவாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடர் மூலம் பல்வேறு இளம் வீரர்கள் இந்திய அணியின் எதிர்காலமாக இந்த ஆண்டு கிடைத்துள்ளனர்.

குறிப்பாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் தனது உச்சகட்ட செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 17 போட்டிகளில் விளையாடி மூன்று சதங்களுடன் 890 ரன்களை குவித்திருந்தார். அவர் இந்த தொடரில் விளையாடிய விதம் அனைவரின் மத்தியிலும் பெரிய பாராட்டினை பெற்றது.

அதோடு அடுத்த இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று பேசும் அளவிற்கு அவரை புகழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த தொடரில் அவர் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இனி அடுத்த இந்திய நட்சத்திரம் இவர்தான் எனும் அளவிற்கு அவரை முன்னாள் வீரர்கள் ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூறுகையில் : நான் இப்போது ஒரு பந்துவீச்சாளராக இருந்தால் சுப்மன் கில்லுக்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்றும் சச்சின் டெண்டுல்கருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் எவ்வாறு பந்துவீச கடினமாக இருக்குமோ அதே போன்று சுப்மன் கில்லுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பந்து வீசுவதும் கடினமாக இருக்கும் என கூறியுள்ளார்.

- Advertisement-

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் : சனத் ஜெயசூர்யா மற்றும் கலுவிதரனா போன்ற இலங்கை வீரர்கள் நான் எப்போது பந்து வீசினாலும் என் ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சி செய்வார்கள். அதனால் அவர்களை எளிதாக நான் பீல்டர்களை செட் செய்து வீழ்த்தி விடுவேன்.

இதையும் படிக்கலாமே: இது என்னடா குட்டி மலிங்காவுக்கு வந்த சோதனை. ஒரு போட்டியில சொதப்பனதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? இதுனால தான் சிஎஸ்கே எப்போவுமே பெஸ்ட்

ஆனால் சச்சின் மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களிடம் அதுபோன்ற வித்தைகள் எல்லாம் பலிக்காது. அவர்கள் நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்களை விளையாடக் கூடியவர்கள். அதுமட்டுமின்றி அவர்களது பேட்டிங் டெக்னிக்கும் சரியான ஒன்று என்பதால் அவர்களை கவனமிழக்க வைத்து அவர்களது விக்கெட்டை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்