- Advertisement -
Homeகிரிக்கெட்எனக்கு தோனியை பத்தி தெரியும். அவருக்கு ஒரு பிரச்சனைனா ஜடேஜா கிட்ட அவர் இத தான்...

எனக்கு தோனியை பத்தி தெரியும். அவருக்கு ஒரு பிரச்சனைனா ஜடேஜா கிட்ட அவர் இத தான் செஞ்சி இருப்பாரு – வாசிம் அக்ரம் பேச்சு

-Advertisement-

சமீபத்தில் ஐபிஎல் 16 ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் விளாசி, சிஎஸ்கே ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற வைத்தார் ஜடேஜா. போட்டி முடிந்ததும் அவரைக் கட்டியணைத்து தூக்கி கொண்டாடினார் கேப்டன் தோனி.

அதே போல ஜடேஜாவும் இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி “அவருக்காக மட்டும்தான் அணி மொத்தமும் வெற்றிக்காக உழைத்தது” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும், அதன் காரணமாக இருவரும் ஒரு போட்டி முடிந்ததும், சற்று கோபமாக பேசிக்கொண்டது போலான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் இப்போது இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். அவரது பேச்சில் தனக்கு தெரிந்தவரையில் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

-Advertisement-

மேலும் இதுபற்றி “இன்றைய சமூக ஊடக உலகில் ஒருவர் வீட்டில் அமர்ந்து ஏதாவது ஒரு செய்தியை எழுத அது வைரலாகி விடுகிறது. ஜடேஜா எத்தனை வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தோனி அவருக்கு சிறப்பான முறையில் நம்பிக்கையும் போதுமான அளவு ஆதரவும் அளித்து, பல வருடங்களாக அவருக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அப்படி இருக்கையில் ஜடேஜாவிற்கும் தோனிக்கும் இடையே எதற்கு பிரச்சினை வரப்போகிறது.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் சமயத்துலயே இங்கிலாந்தில விக்கெட் கீப்பிங் செய்ய தோனி எனக்கு டிப்ஸ் கொடுத்திருக்காரு. ரகசியம் பகிர்ந்த கேஎஸ் பரத்

நான் தோனியை அறிந்தவரையில், அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நேராக அவர் ஜடேஜாவிடம் பேசி விஷயங்களைச் சரிசெய்வார். அதே சமயம் ஜடேஜாவும் தனது கேப்டனின் ஆதரவே தனது ஆட்டங்களுக்குப் பின்னால் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள் தான்” என்று கூறியுள்ளார் வாசிம்.

-Advertisement-

சற்று முன்